பக்கம்:தாயுமானவர்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 236 & தாயுமானவர் காலம் கடந்த ஒருமைப்பாடுடைய பேசாத பேரின்ப நிட்டை யுடையார் எண்ணிறந்தவர்கள் உள்ளனர். இரசகுளிகை மருந்து முதலியவற்றால் எண்வகை சித்தி எய்தினோர் பல் லோர் உள்ளனர். இவர்கள் யாவரும் சூழ்ந்திருக்க அவர்கள் நடுவே செவ்விய நிறம் மிக்க மணிகளால் இழைத்த ஏற்றிருக் கையில் கொலுவீற்றிருக்கும் நின்னைக் கையால் கும்பிட்டுப் பன்முறை வீழ்ந்து பணிந்து என் மனக்குறையெல்லாம் தீரும் வண்ணம் மணம் மிக்க மலர் தூவி உன் திருவடிகளைப் போற்றும் பொருட்டு நீ என்னை வா' என்று அழைப்பதெக் காலம்?' என்று பேசுவர். சின்மையானந்த குரு ஒரு பாடலில் தம் குருநாதரின் அருமைப் பாட்டை மெச்சுவதைக் காணலாம். 'காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப்போல் கட்டுண்டு இருந்தமை வெளியில்விட்டு, அல்லலாம் காப்பிட்டு அதற்கிசைந்த பேரிட்டு, மெய்என்று பேசுபாழ்ப் பொய்யுடல் பெலக்கவிளை அமுதம் ஊட்டிப் பெரியபுவ னத்தினிடை போக்குவரவு உறுகின்ற பெரியவிளை யாட்டமைத்திட்(டு) ஏரிட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட்(டு) இடர்உறஉறுக்கி இடர்தீர்த்(து) இரவுபகல் இல்லாத பேரின் வீட்டினில் இசைந்துதுயில் கொள்மின் என்று சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே..." - சின்மயானந்த - 6 என்று தந்தை நிலையில் வைத்து குருவை விளிக்கின்றார். தம் குருநாதரும் தட்சிணாமூர்த்தி வடிவில் உள்ள இறைவ னும் இவருக்கு ஒருவரே. இறைவனைத் தாயாகவும் தந்தை யாகவும் கருதுவது சான்றோர் வழக்கு. இறைவன் விஷயத் தில் இது சாத்தியமாகின்றது. ஆதலால்தான் அவன் அர்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/256&oldid=892259" இலிருந்து மீள்விக்கப்பட்டது