பக்கம்:தாயுமானவர்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசாரியனின் அருமை & 237 & நாரி, தையல்பாகன், அம்மை அப்பன் என்றெல்லாம் வணங்கப் பெறுகின்றான். அஞ்ஞானத்தில் உழன்று கொண்டிருக்கின்ற மனிதனு டைய வாழ்வும் மரம் செடி கொடி வாழ்வும் ஒப்புடையதாய் அமைகின்றன. மரமாக விரிந்து பெருகக் கூடிய ஆற்றல் எல்லாம் வித்து ஒன்றில் அடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றது. கம்பன் வாக்கில் சொன்னால் ஆலமர்வித்தின் அருங்குறள் என்று. அன்னையின் கருப்பத்தில் வாசம் செய்யும் சிசு ஒன்றின் நிலையும் இத்தகையதே. விதையுள் அடைபட்டுக் கிடக்கும் மரம் ஒன்று காற் றையோ ஒளியையோ பயன்படுத்திக் கொள்வதில்லை. தாயின் கரு அறையில் கிடக்கும் சிசுவின் நிலையும் இதைப் போன்றதேயாகும். அச்சிசு கண்ணால் காண்பதில்லை; காதால் கேட்பதில்லை. மூளையைப் பயன்படுத்தி எண்ணுவ தில்லை. அறிவு அதனிடத்து ஒடுங்கிக் கிடக்கின்றது. முன்பு பல பிறப்புகளில் பெற்றுள்ள அநுபவங்களின் விளைவாக அச்சிசு அறிவுற்றதாக இருப்பினும், அஃது அறிவற்றதாகவே இப்போது அன்னையின் அகப்பையில் கிடக்கின்றது. அவ்வி டத்தைவிட்டுப் புறத்தே செல்ல அதற்குச் சுதந்திரம் இல்லை, ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் அது கருவிலேயே கட் டுண்டு ஒடுங்கிக் கிடந்தாக வேண்டும். கருவறையில் உள்ள சிசுவுக்கு எத்தனைவிதத் தடைக ளும் குறைகளும் உள்ளனவோ, அவையனைத்தும் ஆன வம் படைத்துள்ள மனிதனுக்கு உலக வாழ்வில் உள்ளன. கருவறை வாழ்வு சிசுவுக்குக் கார் இருள்மயமானது. அங்ங் னமே ஆணவத்தால் கட்டுண்டு கிடக்கும் மனிதனை அஞ்ஞா னம் என்னும் கார் இருள் மூடிக் கொண்டுள்ளது. விதை ஒன்றின் குறுகிய நிலை போன்றது. கருவறையிலுள்ள சிசு வின் நிலையும். இந்தச் சிசுவின் குறைபட்ட நிலையில்தான் ஆணவம் படைத்துள்ள மனிதனும் இருக்கின்றான். இந்தக் கோட்பாட்டை காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற 9. கம்பரா. பாலகாண்.வேள்விப்-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/257&oldid=892260" இலிருந்து மீள்விக்கப்பட்டது