பக்கம்:தாயுமானவர்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசாரியனின் அருமை & 239 & அதனைச் சிதைத்து விடாதபடியும், அவை அதனைத் தின்று விடாதபடியும் அதற்கு இடப்பெற்ற வேலி நல்ல காப்பாக அமைகின்றது. அன்னையின் உதரத்தினின்றும் பிறந்துள்ள சிசு பசிப் பிணியால் அல்லல் உறுகின்றது. நோயினால் தாக்கப்பெறும் பொழுதும் அல்லல் படுகின்றது. அல்லல்ப டும் பொழுதெல்லாம் குழந்தை அழத் தொடங்குகின்றது. அழுகின்ற குழந்தைக்குப் பால் கிட்டுகின்றது. அன்னையின் அரவணைப்பும் ஏனைய பாதுகாப்புகளும் கிட்டுகின்றன. எனவே, அழுதல் என்பது இயற்கையினால் - இறைவனால் - சிசுவுக்கு இடப்பெற்ற காப்பு ஆகின்றது. இங்ங்னமே வெளியில் வந்துள்ள செடியைப் போன் றும், வெளியில்விடப்பெற்றுள்ள சிசுவைப் போன்றும் ஆணவத்தில் ஊறிக் கிடக்கும் மனிதனுக்கும் துன்பங்கள் - தொல்லைகள் - அல்லல்கள் - தொடர்ந்து வருகின்றன. துன்பமில்லாத வாழ்வு எவ்வித உயிர்க்கும் இல்லை. உடல் எடுத்துள்ள உயிர்கள் எல்லாம். ஏதேனும் ஒரு வகையில் அல்லல் பட்டே ஆகவேண்டும். அந்த அல்லலினின்று தங் களை விடுவித்துக் கொள்ள உயிர்கள் ஓயாது முயன்று வருகின்றன. அந்த முயற்சியினால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகிறது. ஆக, உயிர்கள் அனைத்துக்கும் விதவிதமான அல்லல்கள் அமைந்திருப்பதே அவற்றின் வளர்ச்சிக்கு ஏது வாகின்றது. இக்கோட்பாட்டை அல்லல் ஆம் காப்புஇட்டு: என்று அடிகள் கூறுகின்றார். உலக வாழ்வில் மனிதன் வெவ்வேறு சூழ்நிலைகளில் வைக்கப் பெற்றிருப்பதற்கு ஏற்ப அவனுக்குப் பல பெயர் கள் வந்தமைகின்றன. (1) பருவநிலைக்கேற்ப பாலன், சிறுவன், இளைஞன், யுவன், காளை, பழுத்த கிழவன் என்றும் பெயர்கள் மாறி மாறி அமைகின்றன. - (2) கல்வி நிலைக்கேற்ப மாணாக்கன், கற்றவன், கலை யில் வல்லவன் என்று பெயர்கள் மாறிமாறி வந் தமைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/259&oldid=892262" இலிருந்து மீள்விக்கப்பட்டது