பக்கம்:தாயுமானவர்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 244 多 தாயுமானவள் விபத்துகளால் கிடைத்த விடுகின்றது. இந்தச் சட்டத்திட்டங் கள் பொது நன்மையின் பொருட்டு மக்களால் ஏற்படுத்தப் பெற்றவை. இதற்குமேல் வாழ்க்கை நலனை முன்னிட்டு இறைவ னால் அல்லது இறைவன் அருள் பெற்ற ஞானிகளால் நியமிக் கப் பெற்றுள்ள கோட்பாடுகளின் தொகுப்பே சுருதி அல் லது வேதாந்தம் எனப்படுகின்றது. சுருதி மொழி தப்பி நடக்கின்றவர்கட்கு தண்டனை வழங்குவதற்கும் ஏற்பாடு உள்ளது. நெறியில் ஒழுங்காகச் செல்லுகின்றவர்கட்கு நலன் தரவும், நெறியில் வழுவுகின்றவர்கட்கு இடர் உறுத்துதற்கும் 'நமன் அல்லது யமன் என்ற தெய்வம் உள்ளது. நெறியை நேராகக் காத்து வருகின்ற இயற்கைச் சக்தியே நமன் என்று வழங்கப் பெறுகிறது. அன்றாட வாழ்க்கையில் காவலர்களிடமிருந்து மறைந்தி ருந்து சட்டத்தைமீறி நடந்து தண்டனை பெறாது தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், இயற்கையின் நியதியை மறைமுக மாக மீறி நடந்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது இடர் கிட்டி விடுவது உறுதி. மறைந்திருந்து தீயில் கை வைத்தாலும் தி கையைச் சுட்டிவிடுவது உறுதியல்லவா? மக்கள் இயற்கை யிலுள்ள நெறியிலிருந்து வழுவுகின்றபொழுதெல்லாம் அவர் களுக்கு நமன் தண்டனை வழங்கி விடுகின்றான். இடர்ப்ப டும் பொழுது துன்பம் வருகின்றது. துன்பப்படும்பொழுது திரும்பவும் தீச்செயலைச் செய்வதில்லை என்ற தீர்மானம் வருகிறது. ஆனால், அது மயான வைராக்கியம் பிரசவ வைராக்கியம் போல் ஆகிவிடுகின்றது. இங்ங்னம் தண்ட னைக்குமேல் தண்டனையைக் கொடுத்து மக்களைத் தீயச் செயல்களினிடமிருந்து விலக்குவது நமன் கடமையாகின்றது. அதனால் அவன் தருமராஜா என்று வழங்கப் பெறுகின்றான். பாண்டவர்களில் மூத்தவனாகிய தருமன், 'நமன் அம்சம் என்ற வரலாற்றையும் நினைவுகூரலாம். பல தடவை தண்டனை பெற்ற அநுபவம் மக்களை நன்னெறியில் நிலைத்திருக்கச் செய்து விடுகின்றது. இதனால் அவர்களிடம் இடர் தலைகாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/264&oldid=892268" இலிருந்து மீள்விக்கப்பட்டது