பக்கம்:தாயுமானவர்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனும் இறைவனுடைய திருப்பெயரும் இணை பிரியாதவை. பெயரைச் சொன்னாலே இறைவன் வந்து விடுகின்றான். பெயர் இறைவனைவிட ஆற்றல்மிக்கது. கோ விந்தா என்று சேலையை உருவி மானபங்கப் படுத்திய போது, திரெளபதி கூவியவுடன் கண்ணன் வரவில்லை; புடவை சுரந்து வளர்ந்தது என்பது பாரதம் உணர்த்தும் உண்மை. இவ்வாறு பெயர் கூறி இறைவனை வணங்கும் நெறி சன்மார்க்க நெறி என்று அடிகளால் குறிப்பிடப் பெறுகின்றது. பிறிதோரிடத்தில் மலரிலும் இறைவன் இருப்பதால் அதை எடுக்க மனமும் ஒருப்படவில்லை என்கின்றார். “பண்ணேன் உனக்கான பூசைஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கன்ற மலருடு நீயே இருத்தி,அப் பனிமலர் எடுக்கமனமும் நண்ணேன்" - கருணாகரக் - 5 என்பது காண்க. இறையடியார்கள் இறைவனை ஏத்திப் புகழும் முறையை ஒரு பாடலில் காட்டுகின்றார். 'உடல்குழைய என்புஎலாம் நெக்குருக விழிநீர்கள் ஊற்றுஎன வெதும்பி ஊற்ற, ஊசிகாந் தத்தினைக் கண்டுஅணுகல் போலவே ஓர்உறவும் உன்னிஉன்னிப் படபடென நெஞ்சம் பதைத்துஉள் நடுக்குறப் பாடிஆ டிக்குதித்துப், பனிமதி முகத்தாலே நிலவுஅனைய புன்னகை பரப்பி, ஆர்த்து ஆர்த்து எழுந்து, மடல்அவிழும் மலர்அனைய கைவிரித் துக்கூப்பி, வானேஅவ் வானில்இன்ப மழையே மழைத்தாரை வெள்ளமே நீடுழி வாழிஎன வாழ்த்தி ஏத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/268&oldid=892272" இலிருந்து மீள்விக்கப்பட்டது