பக்கம்:தாயுமானவர்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 令 249 邻 கடல்மடை திறந்தனைய அன்பர்அன் புக்குஎளியை' - கருணாகரக் - 9 இவ்வாறு நெஞ்சு நெக்குருக இறைவனை ஏத்தும் அன்பர்க்கு இறைவன் எளியவன். 'அழுதால் உன்னைப் பெறலாமே? என்றார் மணிவாசகப் பெருமான். அன்பு ஆழியானை அணுகும் என்னும்" என்றார் பொய்கை ஆழ்வார். வள்ளுவர் பெருமா னும் அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாள்?’ என்றார். அன் புக்கு எல்லை கண்டவர் கண்ணப்ப நாயனார் என்பதாகக் கருதுவர் சைவப் பெருமக்கள். அடிகள் ஆண்டவவைன, 'அன்பருக்கு அன்புஆன மெய்யன்' - ஆனந்தக்களிப்பு 10 என்று அன்பு ஆகவே குறிப்பர். (2) உருவ வழிபாடு: வழிபாட்டுக்கு உருவம் தேவைப்ப டுவதால், அடிகள் தடத்தநிலை இறைவனையே அதிகமாகக் குறிப்பிடுவதாகக் கருதலாம். - 'மூர்த்திதலம் தீர்த்தம் முறையால் தொடங்கினர்க்குஓர் வார்த்தைசொலச் சர்க்குருவும் வாய்க்கும் பராபரமே” - பராபுரம் 156 என்பதனால் சிவபெருமானை வடிவத்திலே வழிபடுவதும், சிறந்த திருப்பதிகட்குச் செல்வதும், புனித தீர்த்தத்தில் நீராடுவ தும் தவம் என்று அடிகள் கருதுவதாகக் கொள்ளலாம். சைவத்தில் சிவாகமத்தின் வழியமைந்த நெறி நான்கு. இவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று வழங்கப் பெறுவதை நாம் அறிவோம். உருவத்திரு மேனிகளைத் தாண்டி வழிபடுதலும், திருமேனிகளின் வழிபாட்டிற்குத் தேவையானவற்றை அகல நின்று செய்தலும் சரியை, சிவபெ ருமானின் அருவுருவத் திருமேனியாகிய இலிங்க மூர்த்தியை அணுகியிருந்து அதன்கண் அப்பெருமானை மந்திரம், கிரியை, பாவனை என்ற மூன்றினாலும், அகத்திலும் புறத்திலும் பல 1. திருவா.திருச்சதகம் - 90 2. முதல் திருவந்:72 3. குறள் - 71 (அன்புடைமை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/269&oldid=892273" இலிருந்து மீள்விக்கப்பட்டது