பக்கம்:தாயுமானவர்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 哆 251 * பஞ்சசுத்தி செய்துநின்னைப் பாவித்துப் பூசைசெய்தால் விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே” - மேலது 154 என்பது காண்க. அகப்பூசை செய்தல் இறைவனுக்கு மிகவும் உகந்தது. 'நெங்சகமே கோயில் நினைவே சுகந்தம்அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே” - மேலது 151 என்பதால் இது தெளியப்பெறும். இதனுள் மனம் கோயிலாக வும், சிந்தனை பரிமளப் பொருளாகவும், அன்பு திருமஞ்சன மாகவும் செப்பியுள்ளமை காண்க. இறைவனது திருவருள் வேண்டுவார் நான்கு நெறிகளில் ஏதாவது ஒன்றில் நிற்க வேண்டும் என்பதைத் தம் மேல் வைத்துக் கூறியுள்ளமை, 'எல்லாம் உதவும் உனை,ஒன்றில் பாவனை யேனும் செய்து புல்ஆ யினும்ஒரு பச்சிலை ஆயினும் போட்டுஇறைஞ்சி நில்லேன்,நல் யோக நெறியும்.செ யேன்.அருள் நீதிஒன்றும் கல்லேன்;எவ் வாறு பரமே பரகதி காண்பதுவே?” - பாயப்புலி 31 என்ற பாடலில் காணலாம். இதனுள் வடிவ வழிபாடு குறிப் பிட்டுள்ளமையால் சரியையும் கிரியையும் கூறப் பெற்றுள் ளன என்பது தெளிவு. அருள்நீதி' என்றது ஞான நெறியை. யோகநெறி நின்று அருந்தவம் கிடப்பாரது இயல்பைப்பற்றிப் பிறிதோர் இடத்தில் அடிகள் விரிவாக உரைத்துள்ளனர். அது வருமாறு: 5. பஞ்ச சுத்தி - பூத சுத்தி, உடல் சுத்தி, திரவிய சுத்தி, ஆன்ம சுத்தி, மந்திர சுத்தி என்பன. விஞ்சிய ஞானம் - பரஞானம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/271&oldid=892276" இலிருந்து மீள்விக்கப்பட்டது