பக்கம்:தாயுமானவர்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 252 令 தாயுமானவர் 'அறிவுமிக்க பெரியோர் உதிர்ந்த காயையும், இலையை யும், கனியையும், சருகையும் மிகுந்த பசி வந்தபோது அதை நிக்கப் பயன்படுத்துவர். பெரிய மலைக் குகையில் கருங்கல் போல் அசையாது கண்மூடி (மெளனியாய்) நெடுங்காலம் இருந்து வருவர். ஐந்தி நடுவே நின்றும் புனித நீரில் மூழ்கியும் உடம்பு எலும்பெலும்பாய்த் தெரியாதபடியாகத் தவநிலை யில் நின்று இருப்பர். குருவிகள் தமது தலை மயிரிடைக் கூடு.வைத்து அலைக்கும்படி வெயிலிலிருந்தும், பிராணவா யுவை அடக்கியும், மனத்தினை ஒடுக்கியும், பேசா நிலையின் ருந்தும், சூடு தணியும்படி அம்புலி மண்டலத்திலுள்ள அமு. தத்தை உண்டு காட்டில் தங்கியும் ஆய்ந்து மறைமுடிவான திருவருளை விரும்பித் தேடினர். அங்கனமிருக்க அடியேன் உலக வாழ்வை விரும்புதல் முறையாமோ என்பது. சரியை, கிரியை, யோகத்திலும் ஞானத்தையே சிறந்ததா கக் கருதினர் அடிகள். உலகப் பொருள்களை அறியும் அறிவும் அறியாமையும் நீங்கிச் சிவபெருமான் கொடுக்கும்படி கட்டுக் கடங்காத பேர றிவால் இறைவனை அறிவதே ஞானம் என்பது அடிகளின் கருத்து. 'அறிவோடு அறியாமை அற்றுஅறிவி னுாடே குறியில் அறிவுவந்து கூடுநாள் எந்நாளே” - எத்தாள். நிற்கும்நிலை - 2 என்பதில் இதனைக் காணலாம். ஞானம் வரும்போது உயிரின் சிற்றறிவு மறைந்து பேர றிவு உதிக்கும். ஆதலின், 'சிற்றறிவு மெள்ளச் சிதைந்துஎம்மான் பேரறிவை உற்றுஅறியா வண்ணம்அறிந்து ஓங்குநாள் எந்நாளே” - மேலது 17 என்று பகர்ந்திருப்பது காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/272&oldid=892277" இலிருந்து மீள்விக்கப்பட்டது