பக்கம்:தாயுமானவர்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 256 : தாயுமானவர் என்று அப்பெருமானால் குறிப்பிடப் பெற்றுள்ளார். அப்பர் பெருமானின் திருப்பாடலடிகள் கருத்துகள், உவமை உரு வக நலன்கள் அடிகளாரின் பாடல்களில் கொப்புளித்து நிற் கின்றன; அவற்றை மெருகூட்டிப் பொலிவு பெறச் செய்கின் றன. 'சிற்றம்பலவனுக்கு எல்லையற்ற அன்பு பூண்ட அடி யேனை, 'அல்லல் என்செயும் அருவினை என்செயும் தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்' (5.1:4) என்ற கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட அடிகள், "கன்மம் ஏது? சுடுநரகு ஏது?மேல் சென்மம் ஏது?எனைத் தீண்டக் கடவதோ? என்ம னோரதம் எய்தும்ப டிக்குஅருள் நன்மை கூர்முக்கண் நாதன் இருக்கவே' - பொன்னைமாதரை 43 என்று தம் பாடலில் ஏத்திப் போற்றுவர். இரண்டிலும் யாப்பு கூட ஒத்திருத்தல் கண்டு இன்புறத்தக்கது. திருவாரூர்த் திருத்தாண்டகத்தில் புற்றிடங் கொண்ட பெருமனை வாகீசர், 'நிலைபெறுமாறு எண்ணுதிரேல் நெஞ்சே நீவா நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையினால் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா சயபோற்றி! போற்றி என்றும் அலைபுலைசேர் செஞ்சடைமேல் ஆதி என்றும் ஆருரா என்றென்றே அலறா நில்லே (5.31:3) என்று போற்றித் துதிப்பர். இந்நெறியை அப்படியே பின் பற்றி அடிகளார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/276&oldid=892281" இலிருந்து மீள்விக்கப்பட்டது