பக்கம்:தாயுமானவர்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் శస్త్రి 259 'அவன் அன்றி ஓர்அணுவும் அசையாது” - எங்கும் நிறைகின்ற - 1 என்று இடம் பெற்றுள்ளதைக் கண்டு மகிழலாம். வாகீசப் பெருமான் மானச பூசையைப் பற்றி தனித் திருநேரிசைப் பதிகம் ஒன்றில் (4.76), 'காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனம்மணி இலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையநீர் அமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டி னோம்ே (4) என்ற பாடலில் குறிப்பிடுகின்றார். இக்கருத்தை அப்படியே அடிகளார், 'நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம்அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே” - பராயரம் 151 என்ற பராபரக் கண்ணியொன்றில் தோசையைத் திருப்பிப் போட்டமாதிரி ஒசையின்றிப் போடுவதைக் கண்டு மகிழ லாம். இதே கருத்து, 'துள்ளும்அறி யாமனது பலிகொடுத் தேன்கர்ம துட்டதே வதைகள்இல்லை துரியநிறை சாந்ததே வதையாம் உனக்கே தொழும்பன்அன்பு அபிடேகநீர் உள்உறையின் என்ஆவி நைவேத்தி யம்ப்ராணன் ஒங்குமதி தூபதிபம் ஒருகாலம் அன்று.இது சதாகாலம் பூசை” - கருணாகர - 8 என்ற பாடலிலும் அமைந்திருப்பது கண்டு மகிழத்தக்கது. இவற்றால் தாயுமானவர் அப்பர் பெருமானிடம் கொண்டிருந்த ஈடுபாடும் அவர்தம் பாடல்களில் நெஞ்சு நெகிழ்ந்து தோய் வும் காண முடிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/279&oldid=892284" இலிருந்து மீள்விக்கப்பட்டது