பக்கம்:தாயுமானவர்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் & 261 & (ஈ) மாணிக்கவாசகர். இப்பெருமானை அடிகள் பல இடங்களில் குறிப்பிட்டு மகிழ்கின்றார். 'போதஆர் நாடுஅறியப் புத்தர்தமை வாதில்வென்ற வாதவூர் ஐயன்அன்பை வாஞ்சிப்பது எந்நாளே” - எந்நாள். அடியார் வண.4 என்பது ஒன்று. இவர்தம் பாடல்களின் தாக்கம் அடிகளார் பாடல்களில் அதிகமாகப் பிரதிபலிப்பதைக் காண முடிகின் றது. மணிவாசகப் பெருமான் கையாண்ட பாமர மக்கள் பாடிய பாவடிவுகளைத் தும்பியார், உத்தியார், அம்மானை, தெள்ளேனம் முதலிய பகுதிகளில் கண்டு அநுபவித்து மகிழ்ந்த அடிகள் வண்ணம், கண்ணிகள் போன்ற இடங்களி லும் வேறு பல இடங்களிலும் அமைத்துப் பாடியுள்ளதைக் கான முடிகின்றது. இறைவன் எல்லாமாகி உயிருக்கு உயிராய் நிறைந்து நிற்பான் என்ற கருத்தை, "வானகி மண்ணாகி வளியாகி, ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான்எனதென்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே." என்பது மணிவாசகப் பெருமானின் மணிமொழி. இதில் ஆழங் கால்பட்டு அநுபவித்த பாங்கு, 'வானதி பூதமாய், அகிலாண்ட கோடியாய், மலைஆகி, வளைகடலுமாய், மதியாகி, இரவியாய், மற்றுஉள எலாமாகி வான்கருணை வெள்ளம்ஆகி நான்ஆகி நின்றவனும்...." - ஆனந்தமானபரம் - 7 என்ற பாடலாக ஒலிக்கின்றது என்று கருதலாம். வாசகனார் 6. திருவா.திருச்சதகம்-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/281&oldid=892287" இலிருந்து மீள்விக்கப்பட்டது