பக்கம்:தாயுமானவர்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多,262 * தாயுமானவர் வாக்கில் 'வான் என்று நின்றவன்' என்று வரும் இறைவன் அடிகளாரின் வரிகளிலும் அதேபோக்கில் வெளிவருவது கண்டு மகிழத்தக்கது. ‘மாலறியா நான்முகனும் காணா' என்ற பரமசிவத்தின் தனித்தலைமையை மணிவாசகப் பெருமான் நெறியில் நின்று தாயுமான அடிகளார், 'கண்டன அல்ல என்றே கழித்திடும் இறுதிக் கண்ணே கொண்டது பரமா னந்தக் கோது.இலா முக்தி, அத்தால் பண்டையின் படைப்பும் காப்பும் பறந்தன மாயை யோடே, வெண்டலை விழிகை காலில் விளங்கிட நின்றான் யாவன்?" - தேன்முகம் - 3 என்ற பாடலில் நிலை நாட்டுவர். பஞ்ச பூதங்கள் ஒன்றனுள் ஒன்று ஒடுங்குவதை, 'உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் இழிதரு காலம்’ என்று மணிவாசகப் பெருமான் கூறியுள்ளதை அடியொற். 'பாரொடுநல் நீர்ஆதி ஒன்றோடொன்று ஆகவே பற்றிலயம் ஆம்போதினில்" - சித்தர்கணம் 3 என்று பேசுவார். அடிகளார் சிவபிரான்பால் கொண்ட பக்தியின் காரண மாக வெளிப்படும் தொடர்கள் வாசகனாரை நினைவுறுத்து கின்றது. 7. மேலது திருவெம்.5 8. மேலது - திருச்சதகம்-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/282&oldid=892288" இலிருந்து மீள்விக்கப்பட்டது