பக்கம்:தாயுமானவர்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 264 & தாயுமானவர் 'தாயினும் இனிய நின்னை - கற்புறு சிந்தை 7 என்று அடிகளாரின் வாக்காக வெளிப்படுகின்றது. போற்றிஓ நமச்சி வாய புய்ங்களே மயங்கு கின்றேன்' என்ற திருச்சதகத் தொடர், 'பொய்ய னேற்குப் புகலிடம் எங்ங்னே" - பொன்னைமாதரை 33 என்ற பாடலில் அமைந்து அழகு செய்கின்றது. 'தந்ததுஉன் தன்னைக் கொண்டது.என் தன்னை' என்ற வாசகனார் பாடலின் குரல், 'தன்னைத்தந்து என்னைத் தடுத்தாண்ட நின்கருணைக்கு என்னைக்கொண்டு என்னபலன் எந்தாய் பராபரமே" - பராபரம் 127 என்ற பராபரத்தில் பாங்குடன் மிளிர்கின்றது. மணிவாசகனாரின் அடைக்கலப் பத்து என்னும் பதிகத் தில் அடிகளார் மிகவும் ஆழங்கால் பட்டவர். அதிலுள்ள: 'செழுக்க மலத்திர எனதின் சேவடி சேர்ந்தமைந்த பழுத்த மனத்தடி யருடன் போயினர்யான் பாவியேன் புழுக்க னுடைப்புன் குரம்பைப்பொல் லாக்கல்வி ஞானமிலா அமுக்கு மலத்தடி யேன்உ:ை யாயுன் அடைக்கலமே' என்ற திருப்பாடலின் உணர்வு அடிகளாரின், 13. மேலது திருச்சதகம் 82 14. மேலது - கோயில் திருப்பதிகம்-19 15. மேலது - அடைக்கலப்பத்து !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/284&oldid=892290" இலிருந்து மீள்விக்கப்பட்டது