பக்கம்:தாயுமானவர்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邻 272 多 தாயுமானவர் “கந்தர்அது பூதிபெற்றுக் கந்தர்அது பூதிசொன்ன எந்தை அருள்நாடி இருக்குநாள் எந்நாளோ - எந்நா.அடியார் வணக்.8 என்று குறிப்பிட்டதுடன் அமையவில்லை. ஐயா! அருண கிரி அப்பா!' என்றெல்லாம் அழைத்தழைத்துத் தன் ஆவிக்கு அருமருந்தாக அப்பெருமகனாரின் மோன நெறியை நினைந்து உருகியதை, 'ஐயா அருணகிரி அப்பா உனைப்போல் மெய்ஆக ஒர்சொல் விளம்பினர் யார்? - வையகத்தோர் சாற்றரிதுஎன்று ஏசற்றார்; தன்அணையாய் முக்கண்ணந்தை நாற்றிசைக்கும் கைகாட்டி னான்- உடல்பொய்வுறவு 28 என்ற பாடலில் கண்டு மகிழலாம். (எ) பட்டினத்தார்: காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்தவரா தலால் ஊர்ப் பெயரையொட்டி இவர் பெயர் வழங்க லாயிற்று. கடலனைய செல்வச் செழிப்பில் திகழ்ந்தவர் முற்றும் துறந்து கோவனத்துடன் வீட்டை நோக்கி வெளியே றியவரை தாயுமான அடிகள் செல்வப் பட்டினத்தார்' எனப் போற்றுவர். வெளியேறியவர் துறவறம் மேற்கொண்டு பிச் சையேற்று, சித்தமலமற்று சிவனடிக்கே ஆளாகி வீடு பேற்றை நோக்கியிருந்தவர். இத்தகையவரை அடிகள், 'பார்.அனைத்தும் பொய்யெனவே படினத்துப் பிள்ளையைப்போல் ஆகும் துறக்கை அரிதுஅரிது.” - உடல் பொய்வுறவு 57 என்று வியந்து போற்றுவர். இவர்தம் பாடல்களால் ஆட் கொள்ளப் பெற்றவர் அடிகள். 27. இவர் வழி வந்தவர்கள் கடல்கோளுக்கு அஞ்சி இப்போது பசும்பெசன் மாவட்டத்தைச் சேர்த்த செட்டிநாட்டுப் பகுதியில் தகரத்தான் என்ற பெயரு டன் வாழ்ந்து வருகின்றனர். பட்டினத்தார் என்ற பொதுப் பெயர் பட்டினத் தார் என்ற துறவியின் பெயராகி விட்டதால், அப்பொதுப் பெயரை வைத்துக் கொள்ளாமல் நகரத்தார் என்று வைத்துக் கொண்டனர் என்றும் கருதலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/292&oldid=892299" இலிருந்து மீள்விக்கப்பட்டது