பக்கம்:தாயுமானவர்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் & 275 & உணர்ந்து 'வேதாந்த சித்தாந்த சமரச தன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே' (சித்தர் கணப் பாடல்களில் இறுதி அடியாக அமைந்திருப்பது) அடிகள் பாடுகின்றார். இந்த சமரச மனப்பாங்கு வள்ளலார் நெஞ்சத்தில் ஆழ்ந்து அகன்று வேரோடியிருப்பதைக் காண முடிகின்றது. “சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச் சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாப் பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய் பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும் அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத் திருக்கூத்துக் கடளவே தெளியும்.இது தோழி இஃது அகப்பொருள் துறையில் தலைவி கூற்றாக அமைத் துள்ளார் வள்ளலார். இத்தகைய பாடல்களால் வள்ளலாரின் கருத்து உலக சமய சமரச சன்மார்க்கமாகத் தழைத்துப் பூத்துக் காய்த்துக் கனிந்துள்ளது. அடிகளாரின் பாடல்களின் தாக்கம் வள்ளலாரின் பல பாடல்களில் கண்டு மகிழலாம். یک و ف 'எவ்வுயிரும் என்உயிர்போல் எண்ணி இரங்கவும்நின் தெய்வ அருள்கருணை செய்யாய் பராபரமே” - பராயரம் 65 என்பது அடிகளின் அருள்வாக்கு. இதனை உளத்துள் கொண்ட வள்ளலாரின், 'எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே, எண்ணிநல் இன்புறச் செயவும் அவ்வுயிர் களுக்கு வரும்.இடை யூற்றை அகற்றியே அச்சநீக் கிடவும் செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்றுகூத் தாடி 30. திருவருட்ப ஆறாம் திருமுறை, அநுபவமாலை 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/295&oldid=892302" இலிருந்து மீள்விக்கப்பட்டது