பக்கம்:தாயுமானவர்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多 276 * தாயுமானவர் ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே ஓங்கவும் இச்சைகாண் எந்தாய் ' என்ற பாடல் அவ்வாக்கிற் கிணைந்து செல்கின்றது. அடிகளாரின் மலைவளர் காதலியில் முதற்பாடல்: 'பதிஉண்டு, நிதிஉண்டு, புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம்.உண்டு எக்காலமும் பவிசுஉண்டு, தவிசுஉண்டு, திட்டாந்த மாகயம படரெனும் திமிரம் அணுகாக் கதிஉண்டு, ஞானம்ஆம் கதிர்உண்டு, சதிர்உண்டு காயசித் திகளும்உண்டு கறைஉண்ட கண்டர்பால் அம்மைநின் தாளில் கருத்துஒன்றும் உண்டாகுமேல்” - தா.பா. மலைவளர் காதலி 1 என்று நடைபெறுகின்றது. இதன் போக்கும் நோக்கும் இராமலிங் கரின், ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு உடைஉண்டு கொடையும்.உண்டு உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்.உறும் உளம் உண்டு வளமும் உண்டு தேர்உண்டு களிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள செல்வங்கள் யாவும்.உண்டு தேள் உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதம் தியானம்.உண்டு ஆயில் அரசே ” என்ற பாடலுடன், இயைந்து செல்வத்தைக் கண்டு மகிழலாம். இறைவனை அருளாகக் கண்டவர் அடிகள். 31. திருவருட்ப ஆறாம் திருமுறை பிள்ளைச் சிறு விண்ணப்பம் 18 32. திருவருட்பா. முதல் திருமுறை. தெய்வ மணிமாலை 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/296&oldid=892303" இலிருந்து மீள்விக்கப்பட்டது