பக்கம்:தாயுமானவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 12 శ. தாயுமானவர் வேண்டுவனவற்றைச் செய்வித்துக் கொண்டு தங்கள் நிட்டை நிலைக்கு இடையூறின்றி இனிது வைகி அருள்க’ என்று கூறி அவருக்கு வேண்டிய பலவற்றையும் செய்து வந்தார். ஆயி னும் தாயுமானவர் அரசு அலுவலைப் பார்த்துக் கொண்டே ஞானநெறியில் ஒழுகி வந்தார். இக்காலத்தில்தான் திருவா னைக்கா அகிலாண்ட நாயகிமீது சந்தவிருத்தம் பாடப் பெற் றது என்பர். இதற்கிடையில் தாயுமானவர் தம் குருநாதரை வணங்கித் தமக்கு நிருவானதிக்கை செய்து துறவு நிலையை அளிக்குமாறு வேண்டினார். ஆயினும், சிறிதுகாலம் இல்ல றத்தில் இருந்து மீண்ட பின்பே ஆஃது உனக்கு வாய்க்கும்' என்ற குருநாதரின் அருள்வாக்குப் பிறந்தது; அதனால் தாயு மானவர் யாதும் சொல்லாது அமைதியுற்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/32&oldid=892317" இலிருந்து மீள்விக்கப்பட்டது