பக்கம்:தாயுமானவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வாழ்வில் திசைதிருப்பம் 1625ష్ట్రావు திரிசிபுர மன்னர் விசயரங்க சொக்கநாத நாயக்கர் உலக வாழ்வை நீத்தார். அவர் ஆட்சி அவர் துணைவி மீனாட்சியின் பொறுப்பிற்கு வந்தது. அரசமாதேவி தாயுமானவரை அழைத்துப் பெரிய கணக்கு வேலையைப் பார்க்க வேண்டும் என்று குறையிரந்தனர். தாயுமானவரும் ஒருவாறு இணக்கமுற்றனர். அரசமாதேவி தாயுமானவரின் கட்டழகினால் ஈர்ப்புற்று ஒருநாள் தம் தகாத செயலுக்கு உட்படுமாறு வற்புறுத்தினர். தாயுமானவர் அதற்கு இணங் காது அவருக்கு அறிவுரை பல பகர்ந்து அவரை இருக்கச் செய்தார். அரசியார் தகாத செயலுக்குத் தம்மை ஆட்படுத்த நினைத்த நிகழ்ச்சி அடிகள்தம் மனத்தில் உறுத்திக் கொண்டி நந்ததால், அவர் மகளிரை இழித்துப் பேச வாய்ப்பு ஏற்பட் டது போலும் என்று கருதலாம். 'முத்தனைய மூரலும் பவளவாய் இன்சொலும் முகத்துஇலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரகசன் னதம்ஏற்ற இருகும்பம் முலையின்மணி மாலைநால வைத்துஎமை மயக்கிஇழு கண்வலையை வீசியே மாயா விலாசமோக வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையாகள் சிற்றின்பமோ புத்தமிர்த போகம் புசித்துவிழி இமையாத பொன்நாட்டும் வந்தது என்றால், போராட்டம் அல்லவோ பேரின்ப முக்தி.இப் பூமியில் இருந்துகான, - எத்தனை விகாரம்வரும் என்றுசுகர் சென்றநெறி இவ்வுலகம் அறியாததோ - சச்சி.சிவம்-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/33&oldid=892318" இலிருந்து மீள்விக்கப்பட்டது