பக்கம்:தாயுமானவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 16 * தாயுமானவர் அவனைத் திரும்பிப் பார்த்தவுடன் அவன் மனநிலை கலங்கி யது. உடனே அவர்தம் திருவடியில் வீழ்ந்து வணங்கித் தன்னை மன்னித்தருளுமாறு வேண்டிக் கொண்டு தான் வந்த வழியே மீண்டான். பின்னர் தாயுமானவர் இராமேசுரம் செல்லும் நோக்கு டன் அருளையரோடு புறப்பட்டார். இருவரும் விராலி மலையை அடைந்தனர். அங்கே வசித்து வந்த சைவன் வேளாள வள்ளல் ஒருவரது கனவில் இறையருளால் ஒரு துறவி தோன்றி, "என் பிள்ளைகள் இருவர் பட்டினியால் இவண் போந்துள்ளனர். அவர்கட்கு சோறு நல்கி வேண்டு வன செய்க' என்று ஏவினார். அந்த வள்ளல் அவர்கள் இருவரையும் தேடிக் கண்டறிந்து உணவு நல்கினார். இதன் சிறந்த பயனாக மகப்பேறு இன்றியிருந்த அவருக்கு மைந்தன் பிறந்தான். அந்தப் பிள்ளைக்குத் தாயுமானவன் என்றே திருநா மம் சூட்டினார். இன்றும் அந்த வேளாளர் மரபில் வந்தவர் கள் தங்கள் பெயருக்கு முன்னர் 'தாயுமான் என்ற அடைமொ ழியைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். வேளாள வள்ளல் ஆதரவில் சில் நாட்கள் தாயுமானவர் தங்கியிருந்த பொழுது சித்தர் ஒருவர் இவர்தம் உயர்ந்த மனநிலையைக் கண்டு இவரை சித்தர்கள் பலர் தங்கியிருந்த ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றார். தாயுமானவர் சித்தர்க ளுடன் பல நாட்கள் அளவளாவியிருந்தனர். இக்காலத்தில் தான் சித்தர்கணம் என்ற பதிகம் பாடப் பெற்றதாகக் கருத லாம். உடல் சித்தியும் உயிர் முத்தியும் ஒருங்கெய்த வேண்டு மென்ற கருத்து சித்தர்களின் சூழ்நிலையில் தாயுமானவரிடம் தோன்றியிருத்தல் கூடும் என்று கருதலாம். ஆனந்தமானபரம்' முதலிய திருப்பதிகங்களும் விராலிமலையில் தங்கியிருந்த பொழுதுதான் பாடப் பெற்றன. பின்னர் தாயுமானவர் புதுக் கோட்டைக்கு அருகிலுள்ள கபிலை மாநகர் என்னும் திருக்கோ கரணம் என்ற ஊரையடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் பெரிய நாயகியார்மீது காற்றைப் பிடித்து என்ற திருப்பாடலை அருளிச் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/36&oldid=892321" இலிருந்து மீள்விக்கப்பட்டது