பக்கம்:தாயுமானவர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 18 & தாயுமானவர் 'நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபர ஞானஆ னந்தவொளியே! நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே! நானெனும் அகந்தைத்தீர்த்தென் மதியுண்ட மதியான மதிவதனவல்லியே! மதுகு தனன்தங்கையே! வனராச னுக்கிருகண் மணியாய் உதித்தமலை வளர்காத லிப்பெனுமையே!” என்று இன்னும் பலவிதமாகவும் விளித்து உன்.இருதாள், மட் டிலே மனது செல நினதருளும் அருள்வையோ? என்று வேண்டு கின்றார். இப்பதிகத்தில் செல்வர்க்குக் குற்றேவல் செய்யும் இழி வான வாழ்க்கையை, 'மிடியிட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலமெனவும் மெய்யெலாம் உள்ளுடைந்து வீறிட்ட செல்வர்தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உறவேதனும் துடியிட்ட வெவ்வினையை ஏவினான்; பாவிநான் தொடரிட்ட தொழில்களெல்லாம் துண்டிட்ட சாண்கும்பி யின்பொருட்டாயதுன் தொண்டர்பணி செய்வதென்றோ?' என்ற பகுதியால் வெறுத்துக் கூறுவர். தாயுமானவர் இராமே சுவரத்தில் இருந்தபோது மழை இல்லாதிருந்தது. அடிகள் ஒரு வெண்பாவைப் பாடியருள, நல்ல மழை பெய்து அப்பகுதி செழிப்புற்றதாகச் செப்புவர். இராமேசுரத்தில் சிலகாலம் தங்கியிருந்த பின்னர் தாயு மானவரும் அருளையாவும், வடதிசை நோக்கிச் சென்றனர். அப்போது தாயுமானவர்பால் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை 4. மலைவளர் காதலி - 1 5. மேலது - 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/38&oldid=892323" இலிருந்து மீள்விக்கப்பட்டது