பக்கம்:தாயுமானவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 20 & தாயுமானவர் சிலகாலம் தாயுமானவர் இல்லறம் நடத்தினார். ஒர் ஆண் குழவி பிறந்த பின்னர் துணைவியார் சிவபதம் எய்தினார். பிள்ளைக்குக் கனகசபாபதி என்ற திருநாமம் சாத்தப்பட்டது. இல்லறத்திலிருந்தபோதுதான் கண்ணிகள் பலவும் பாடினதா கக் கருத முடிகின்றது. அன்னையார் காலகதி அடையும் வரை தாயுமானவர் திருமறைக்காட்டில் இருந்தார். அதன் பின்னர் தமது செல்வத்தையும் செல்வமைந்தனையும் தமையனாரி டம் ஒப்படைத்து விட்டுத் தாம் கடுந்துறவு பூண் அவாவுற் றுத் தாயுமானவர் தாயுமான அடிகள் ஆனார். கோவண ஆடை யோடு இல்லத்தைவிட்டு வெளியேறினார். அருளைய பிள் ளையும் அடிகளைப் பின்தொடர்ந்தார். அடிகள் இறைவன் தமக்குச் செய்த உதவியை ஒரு பாடலில் விதந்தோதுவர். 'அலைகடல் போன்ற பெருஞ்செல்வம் அல்லல் விளைக் கும். ஆகவே, அதனை நல்காது ஒருவர் பின் கைகட்டிச் சென்று வருந்தாமலும் இல்லையென்று யாசிப்போருக்கு இல்லை என்று சொல்லாமலும் பகுத்துண்டு பல்லுயிரோம்பி வாழ்வதற்கு வேண்டும் செல்வம் அளித்து நோயற்ற நல் வாழ்க்கை அளித்து, யோக ஞான நெறி நிற்கும் நிலையும் உள்ளின்று உணர்த்தியதுடன் மெளன குருவாக நிலமிசைத் தோன்றி அருள்புரிந்த நின் சிறந்த கருணையை ஐய! என் னென்று புகல்வேன். இவன் சிறியன்; அறிவிலியாயினும் நமது அடிமை என்ற கருத்து நின் திருவுள்ளத்திலிருந்தது போலும்' என்று கூறினார். மோனநிலையை அவாவி நிற்றல் தாயுமான அடிகளின் மனம் மோன நிலையை நாடி நின்றது. திருவருள் தமக்குப் பல நலங்கள் தந்தது போலவே, இடைவிடா மோன நிட்டை யுடன் நல்க வேண்டும் என்பார். "வருவன வந்தெய்துக; வாராதன ஒழிந்து போக' என்று பதிலும் விடுத்து மனச்சான் றிற்கு மாறின்றியொழுகும் நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த உண்மைக் கருத்தொருமையை முற்றிலும் உணர அறிவு உதவியதும், உடல்நிலையாமையுணர்ந்து ஞானநெறி நிற்ற லையளித்ததும் என்றும் நிலைத்த பேரின்ப நுகர்ச்சியே 8. மேலது - 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/40&oldid=892326" இலிருந்து மீள்விக்கப்பட்டது