பக்கம்:தாயுமானவர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 22 & தாயுமானவர் மோன நிலையை எய்துமுன் தன்னிலைமை எவ்வாறு இருந்ததென்பதை அடிகள், 'ஒன்றைப் பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன்: பெருக்கத் தவித்துளறியே பெண்நீர்மை யென்னஇரு கண்ணி இறைத்துநான் பேய்போல் இருக்கஉலகம் சுற்றிநகை செய்யவே உலையவிட் டாயெனிற் சொல்ல.இனி வாயுமுண்டோ?' என்றும், 'கருத்தினுட் கருத்தாய் இருந்துநீ உணர்த்தும் காரணம் கண்டுசும் மாதான் வருத்தமற் றிருந்து சுகம்பெறா வண்ணம் வருந்தினேன்' என்றும் கூறுவர். இறைவன் மெய்யன்பையும் இன்பநிட்டை யையும் தாராவிடின், 'நீராய் உருகஉள் ளன்புதந் தே,சுக நிட்டையைநீ தாரா விடின்என் பெருமூச்சுத் தான்.அத் தனஞ்சயனே' என்று உயிர் துறபபதாகக கூறுவாா. தனஞ்செயன் என்பது உயிர் உடலை நீத்தபின் உடலின்கண் நின்று புறம்போகும் ஒருவகை வாயுவாகும். மோன நிட்டையிற் பழகிய பின்னர் அடிகள் தன் நிலையை, 'நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறொரு நாட்டமின்றிக் கிடக்கினும், செவ்விது இருக்கினும், நல்லருட் கேள்வியிலே 15. சுகவாரி - 6 16. ஆரணம் - 6 17. பாயப்புலி - 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/42&oldid=892328" இலிருந்து மீள்விக்கப்பட்டது