பக்கம்:தாயுமானவர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 26 & தாயுமானவர் 1581க்குச் சரியான சுபகிருது ஆண்டு (கி.பி.1659) தைத் திங்கள் சோமவாரம் விசாக நட்சத்திரம் பெளர்ணமி கூடிய நாள் என்பது அவர்தம் சீடர் கோடிக்கரை ஞானியார் பாடலால் நன்கு விளங்குகின்றது. "துகளறு சாலி வருடம்ஆ யிரத்தைஞ் நூற்றொடெண் பத்தொன்று தொடரும் மிகுசுப கிருதாம் வருடம்தை மாதம் வெண்மதி வாரநாள் விசாகம் மகிமைசேர் பூரணத் திதியினில் அருத்த மண்டல சமயத்திற் கங்கை திகழ்சனி யதனில் தாயுமா னவர்தாம் சிவத்தினிற் கலந்த நற்றினமே." இந்தப் பாடல் அடிகள் சமாதியான இடத்தில் எழுப்பப் பெற்றுள்ள திருக்கோயிலில் உள்ள கல்வெட்டில் காணப்படு கின்றது. அருளையர் என்பவர் அடிகள்தம் திருமகனார் கனகசபா பதி பிள்ளைக்கு மெய்ஞ்ஞானம் உணர்த்தினர். அவர் தஞ் சைக்குக் கீழ்பால் உள்ள அன்னம்பேட்டையில் தங்கியிருந் தார். அவருக்குப் பின்னர் அவர் செல்வர் அட்சய லிங்கம் பிள்ளை என்பவர் ஆண்டுள்ள மடத்தலைவராய் எழுந்தருளி யிருந்தனர். அவருக்குப் பின் வழிவழியாகப்பல துறவிகள் ஆசாரியப் பரம்பரையைப் பாதுகாத்து வந்துள்ளனர். அரு ளைய அடிகள் தாயுமான அடிகள்மீது பாடிய அருள்வாக்கிய அகவல் சொல்லழகும் பொருள் நயமும் வாய்ந்ததாகத் திகழ் கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/46&oldid=892332" இலிருந்து மீள்விக்கப்பட்டது