பக்கம்:தாயுமானவர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

※ 30 多 தாயுமானவர் சித்தம்அறி யாதபடி சித்தத்தின் நின்றிலகு திவ்யதே. சோமயத்தைச் சிற்பர வெளிக்குள்வளர் தற்பரம தானபர தேவதையை அஞ்சவி செய்குவாம்' என்பவை காண்க. இன்னும், 'நித்தியமாய் நின்மலமாய், நிட்களமாய் நிராமயமாய் நிறைவாய் நீங்காச் சுத்தமுமாய்த், தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை சுடராய்.... தேசுபெற நீவைத்த சின்முத்தி ராங்குசச் செங்கைக்கு ளேயடக்கிச் சின்மயா னந்தசுக வெள்ளம் படிந்துநின், திருவருட் பூர்த்தியான” இவை போன்ற எத்தனையோ உள்ளன. இவை தவிர, துரிய வடிவு, தத்துவ சொரூபம், சாலம்பர கிதம், சாசுவத புட்கலம், நிட்ப்ரபஞ்சப் பொருள், நிரஞ்சன நிராமயம், அந்தகாரம், அண்ட பகிரண்டம், மாயா விகாரம், தீதில் பராபரம், சுகபரிபூரணம், நிராலம்பகோசரம், சின்முத்தி ராங்குசம், நிர்க்குண நிராமய! நிரஞ்சன! இத்யாதிகள்; கிரீட பதி, உக்ரமிகு சக்ரதரன், புத்தமிர்த போகம், தொந்தரூபம், நியமலட்சணம், இயம லட்சணம், அத்துவித அநுபவம், பூரணானந்தவாழ்வு, போத பூரணவெளி, மகாமந்த்ர ரூபி, முத்தாந்த வித்து, அகண்டிதம், சக்ரவர்த்தி தவராச யோகி, அகண்டிதானந்தம் - இப்படி எண்ணற்ற சிறுசிறு வடமொழித் தொடர்கள் பாடல்களுள் பதிந்து கிடப்பதையும் காணலாம். இவை யாவும் பாடலின் போக்கைக் கெடுக்காமல் அவை ஆற்றொழுக்காய், பொன்னும் மணியும் கலந்த வெள்ள மாய்ச் செல்லுகின்றன. உருவகங்கள்: உறைந்த உவமைகளே (condensed simile) உருவகங்களாம் என்பர் ஆங்கிலத் திறனாய் வாளர். அடிக ளாரின் திருப்பாடல்களில் எண்ணற்ற உருவகங்கள் தாயு-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/50&oldid=892337" இலிருந்து மீள்விக்கப்பட்டது