பக்கம்:தாயுமானவர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冷 ඡා அருளிச் செயல்களின் போக்கு 令 33 哆 சேய்போல், ஆசையெனும் பெருங்காற்றுடு இலவம் பஞ்செ னவும் மனம் அலையும் காலம், காட்டையிற் பம்பர சாலம் போல், திரையிலா நீர்போல், காந்தமதை எதிரகாணிற் கருந் தாது செல்லும், தீயுண்டிருந்த மெழுகு, சூல் கொண்ட மேகம் என, ஊசற் சுழல்போல் உலகநெறி, விண்ணாறு வெற்பின் விழுந்தாங்கென மார்பிற் கண்ணாறு பாய்ச்சிடும் காதல் வெள் ளம், நதியுண்ட கடலெனச் சமயத்தையுடைய ஞான ஆனந்த ஒளி, சேலொத்த விழி, பாலொத்த மொழி, கன்றினுக்குச் சேதா கனிந்திரங் கல்போல எனக்கென்றிரங்குவாய், அன் னையிலாச் சேய்போல அலக்கண் உற்றேன், சொல்லாடா ஊமரைப் போல் சொல்லிறந்து, அப்பும் உப்பும் போன்ற அயிக்ய பரானந்தர், சூதாடுவார்போல் துவண்டு துவண்டு மனம் வாதாடின், நித்திய மொன்றில்லாத நீர்க்குமிழி போன்ற உடல், நூலேணி விண்ணேற நூற்குப் பருத்திவைப்பார் போலே, கருவி நன்னுற் போதம், கேட்டதையே சொல்லும் கிளி போல, நின்னருளில் வாட்டமின்றி வாய்பேசல், ஆடி ஒய் பம்பரம்போல் ஆசையுடன் எங்கும் உனைத்தேடி ஒய்கின்றேன், சித்த நிருவிகற்பம் சேர்ந்தார் உடல் தீபம் வைத்த கர்ப்பூரம் போல் வயங்கும், உன்னுமனம் கர்ப்பூர உண்டைபோலே கரைய, உண்டுபோல் இன்றாம் உலகு, தாயிருந்தும் பிள்ளை தளர்ந்தாற்போல், எவ்விடத்தும் நீயிருந் தும் நான் தளர்ந்தேன், காய்ச்சச் சுடர் விடும் கட்டிபோல், பட்டப் பகல்போல பாழ்த்த சிந்தை மாளின், காந்தம் இரும் பைக் கவர்ந்திழுத்தால் என்ன அருள்வேந்தன் எமை இழுத்து, நீர்க்குமிழி போன்ற உடல் நிற்கையிலே, சித்தம் எனும் பெளவத் திரைக்கடலில் வாழ்த்துரும்பாய், எள்ளுக் குள் எண்ணெய்போல் எங்கும் வியாபகமாய் உள்ள ஒன்றை, கானற்சலம் போன்ற கட்டுமலைப் பொய்தீர, தக்க ரவி கண்ட சரோருகம் போல் என் இதயம் மிக்க அருள் கண்டு, வான் முகில் கண்ட மயூரபட்சிபோல ஐயன் ஞானந டங் கண்டு, சந்திரனை நாடும் சகோர பட்சி போல் அறிவில் வந்த பரஞ்சோதியை, கல்கண்டால் ஒடுகின்ற காக்கைபோல், பொய்மாயச் சொற்கண்டால் ஒடும் அன்பர், செங்கதிரின் முன் மதியம் தேசடங்கி நின்றிடல் போல், பாலொடு நீர்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/53&oldid=892340" இலிருந்து மீள்விக்கப்பட்டது