பக்கம்:தாயுமானவர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 34 喀 தாயுமானவர் கலந்து, வாலற்ற பட்டமென மாயா மனப்படலம் காலற்று விழ, சாட்டையிலாப் பம்பரம் போல் ஆடும், சட்டையொத்த இவ்வுடல், பள்ளங்கள்தோறும் பரந்த புனல்போல், காலர்ல் வழிதடவும் காலத்தே கண் முளைத்தாற்போல, அன்னை போல் அருள்மிகுந்து இப்படி எண்ணற்ற உவமைகளால் அடிகளின் கருத்துகள் விளக்கம் அடைகின்றன. இவற்றால் அவர்தம் பெரும்புலமையும் தெளிவாகின்றது. அருமையான தொடர்கள்: எத்தனையோ தொடர்கள் படிப் பவர் நெஞ்சைப் பிணித்து அவற்றிலுள்ள கருத்துகளை ஆழப் பதிக்கின்றன. அழகான தொடர்கள், ஆழம் உள்ள தொடர்கள், பழமொழிகள்போல் வழங்கும் தொடர்கள், ஒரு முறை படித்தாலே நெஞ்சிலே நிலைத்து வாழும் தொடர்கள் பலப்பல உள்ளன இவர்தம் பாடல்களில். இறைவனைப்பற் றிப் பாடுகின்ற பாடல்களில் இத்தகைய தொடர்கள் யாவும் படித்துப் படித்து அநுபவிக்க வேண்டியவை. 'பொய்வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே' இஃது இறைவனைப்பற்றிய ஒரு தொடர். பொய்வளரும் நெஞ்சினர்கள் காண முடியாத காட்சிதான் இறைவன் என்கின் றார் இதில். இந்த இறைவன் எப்படிப்பட்டவன்? அவன் இருக்கும் இடம் எது? 'பார்க்கும்.இடம் எங்கும்.ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே' என்பதில் அந்த இறைவனின் தன்மையையும் அவன் எங் கும் இருப்பதையும் காட்டுகின்றார். இவர்தம் பாடலிலிருந்து பல தொடர்கள் 'பழமொழிகள்' போல் தமிழர்களிடையே வழங்கி வருகின்றன. 3. சின்மயானந்தகுரு - 4 4. பரிபூரணானந்தம் - பதிகத்தின் பாடல்தோறும் உள்ள இறுதியடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/54&oldid=892341" இலிருந்து மீள்விக்கப்பட்டது