பக்கம்:தாயுமானவர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 36 & தாயுமானவர் இஃது ஒருவகை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இதில் இறைவனைத் தீதில்பொருளாகக் காண்கின்றார். 'பந்தமறும் மெய்ஞ்ஞான மான மோனப் பண்பொன்றை அருளி,அந்தப் பண்புக் கேதான் சிந்தைஇல்லை; நானென்னும் பான்மை இல்லை; தேகம்இல்லை; காலம்இல்லை; திக்கும் இல்லை; தொந்தம்இல்லை; நீக்கம்இல்லை; பிறிதும் இல்லை; சொல்லும்இல்லை; இராப்பகலாய்த் தோற்றம் இல்லை; அந்தம்இல்லை; ஆதிஇல்லை; நடுவும் இல்லை; அகமும்இல்லை; புறமும்இல்லை; அனைத்தும் இல்லை' என்பது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். மெய்ப்பொ ருள் இயல்பு இன்னதெனக் காட்டுவது. 'மறைமுழக் கொலிப்பத், தானே வரதமோ டபயக் கைகள் முறைமையின் ஓங்க, நாதம் முரசெனக் கறங்க, எங்கும் குறைவிலா வனம்நி றைந்து கோதிலா நடனம் செய்வான் இறையவன் எனலாம், யார்க்கும் இதயசம் மதம்:ஈ தல்லால்' என்பது ஒருவகை அறுசீர் ஆசிரிய விருத்த்ம், தில்லையில் திருநடனம் புரியும் கூத்தப்பெருமானே முதல்வன் என விளக் கும் முறையில் அமைந்தது. 'விதியை யும்விதித் தென்னை விதித்திட்ட மதியை யும்விதித் தம்மதி மாயையில் பதிய வைத்த பசுபதி நின்அருட் கதியை எப்படிக் கண்டு களிப்பதே?' என்பது கலிவிருத்தம். எல்லாவற்றையும் வைத்தவன் இறை வனே என்று கூறுவது. 12. ஆகாரபுவனம் - 20 13. தேன்முகம் - 5 14. பொன்ன்ைமாதரை - 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/56&oldid=892343" இலிருந்து மீள்விக்கப்பட்டது