பக்கம்:தாயுமானவர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களின் போக்கு & 37 & 'உள்ளமே நீங்கா என்னைவா வாவென் றுலப்பிலா ஆனந்த மான வெள்ளமே பொழியும் கருணைவான் முகிலே! வெப்பிலாத் தண்ணருள் விளக்கே! கள்ளமே துரக்குந் துவெளிப் பரப்பே! கருவெனக் கிடந்தபாழ் மாயப் பள்ளமே விழா தெனைக்கரை யேற்றிப் பாலிப்ப் துன்னருட் பரமே' இஃது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். 'என்னைக்கரை ஏற்றும் என்று இறைவனை வேண்டுவது. "கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக் கோவே மன்றிற் கூத்தாடற் கெழுந்த சுடரே இமையவரை என்தாய் கண்ணுக் கினியானே! தொழுந்தெய்வமும்நீ குருவும்நீ: துணைநீ தந்தை தாயும்நீ! அழுந்தும் பவம்நீ நன்மையும்நீ: ஆவி, யாக்கை நீதானே' இஃது மற்றொரு வகை அறுசீர் ஆசிரிய விருத்தம். எல்லாம் நீயே" என்று இறைவனைக் காட்டுவது. "கொடுக்கின் றோர்கள்பாற் குறைவையா தியானெனும் குதர்க்கம் விடுக்கின் றோர்கள்பாற பிரிகிலா துள்ளன்பு விடாதே அடுக்கின் றோர்களுக் கிரங்கிடும்; தண்டமிழ் அலங்கல் தொடுக்கின் றோர்களைச் சோதியா தது.பரஞ் சோதி' இது கலிநிலைத்துறை. பரஞ்சோதி எது என்பதை எடுத்துக் கூறுவது. 15. ஆரணம்-4 16. சொல்லற்கரிய-5 17. ஆசையெனும் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/57&oldid=892344" இலிருந்து மீள்விக்கப்பட்டது