பக்கம்:தாயுமானவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 39 & 努 அருளிச் செயல்களின் போக்கு "துன்பக் கடலில் துளைந்ததெலாம் தீய்ந்ததே! இன்பக் கடலில் இரும்என்ன - அன்பிற் கரைந்து கரைந்துருகிக் கண்ணுருவிகாட்ட விரைந்துவரும் ஆனந்த மே” இது நேரிசை வெண்பா. 'அழுதால் ஆனந்தம் பெறலாம்' என்று கூறுவது. "வாழாது வாழஉனை வந்தடைந்தோர் எல்லாரும் ஆழாழி யென்னஅரு ளானார் அழுக்காற்றோடு ஏழாய் எனஉலகம் ஏசும்இனி நான்ஒருவன் பாழாகா வாறுமுகம் பார்நீ பர்ாபரமே!’ இது கொச்சகக் கலிப்பா. ஒரு கால் வாராயோ?” என்று வேண்டுவது. இனி, நீண்ட விருத்தங்கள் சிலவற்றைக் காண்போம். "ஊர்அனந் தம்பெற்ற பேர்அனந் தம்;சுற்றும் உறவனந் தம்:வினையினால் உடல்அனந் தம்;செயும் வினை.அனந்தம்:கருத் தோஅனந் தம்,பெற்றபேர் சீர்அனந் தம்:சொர்க்க நரகமும் அனந்தம்நல் தெய்வமும் அனந்தம்;பேதம்! திகழ்கின்ற சமயமும் அனந்தம்;அத னான்ஞான சிற்சத்தி யால்உணர்ந்து, கார்அனந் தம்கோடி வருடித்த தெனஅன்பர் கண்ணுவிண் ணுந்தேக்கவே கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலை,நம் கடவுளை, துரியவடிவை பேர்அனந் தம்பேசி மறைஅனந் தம்சொலும் பெரியமவு னத்தின்வைப்பைப் பேசரும் அனந்தபத ஞானஆ னந்தமாம் பெரியபொரு ளைப்பணிகுவாம்' 21. உடல் பொய்யுறவு - 38 22. திடமுறவே - 3 23. திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/59&oldid=892346" இலிருந்து மீள்விக்கப்பட்டது