பக்கம்:தாயுமானவர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళ 40 శ• தாயுமானவர் இது பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருவருட் பெருமையைப் பேசுவது. பரிபூரணானந்தம் சின்மயானந்த குரு, மெளனகுரு வணக்கம், மலைவளர்க் காதலி முதலிய வற்றிலுள்ள பாடல்கள் யாவும் இவ்வகை நீண்ட விருத்தத் தால் அமைந்தவை. 'காற்றைப் பிடித்துமட் கரகத் தடைத்தபடி கன்மப் புனற்குள்ஊறும் கடைகெட்ட நவவாயில் பெற்றபசு மட்கலக் காயத்துள் எணைஇருத்திச் சோற்றைச் சுமத்திநீ பந்தித்து வைக்கத் துருத்திக்குள் மதுவென்னவே துள்ளித் துடித்தென்ன பேறுபெற் றேன்?அருள் தோயம்நீ பாய்ச்சல்செய்து நாற்றைப் பதித்ததென மோன்மாம் பயிரதனை நாட்டிப், புலப்பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல், முன்னின்று, நாடுசிவ போகமான பேற்றைப் பகுத்தருளி எனைஆள வில்லையோ? பெரியஅகி லாண்டகோடி பெரியநாயகி|பெரிய கபிலைமா நகர்மருவு பெரியநாயகிஅம்மையே’ என்பது சந்த விருத்தம். சிவபோக விளைவைத் தெளிவாகக் காட்டுவது. அகிலாண்ட நாயகி பற்றிய திருப்பாடலும் அந்த விருத்தமே. 'திகையாதோ? எந்நாளும் பேரா னந்தத் தெள்ளமுதம் உதவாமல் திவலைகாட்டி, வகையாக அலக்கழித்தாய் உண் டுடுத்து வாழ்ந்தேன்நான் இரண்டுகால் மாடுபோலே گ و و 24. பெரியநாயகி - 1 25. பெற்றவட்கே - 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/60&oldid=892348" இலிருந்து மீள்விக்கப்பட்டது