பக்கம்:தாயுமானவர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களின் போக்கு 令 41 哆 என்பது தாழிசை போல் அமைந்தது! தம்மை இரண்டுகால் மாடாக இனப்படுத்துகின்றார். தந்தை தாய்', 'கல்லாலின்' என்ற தலைப்பில் உள்ளவையும் இவ்வகையினவே. நாட்டுப்புறப் பாடல் யாப்பு முறைகள்: பழம்புலவர்கள் போற்றுகின்ற யாப்பு வழிப்பட்ட பாடல்களில் சிறப்பாகத் திகழ்ந்த அடிகளார் மக்கள் பாடும் நாட்டுப் புறப் பாடல்க ளின் வடிவங்களையும் எடுத்துக் கொண்டு பல ஆழ்ந்த, உயர்ந்த கருத்துகளை அவற்றில் அமைத்து வழங்குகின்றார். கண்ணிகள், ஆனந்தக் களிப்பு ஆகியவை இப்போக்குக ளைக் கொண்டவை. சிறுசிறு கண்ணிகளில் பெரியவிலங்குகளையும், கண்ணி வைத்துப் பிடிக்கும் வேடர்போல் மிக உயர்ந்த மெய்யுணர் வுக் கருத்துகளை கண்ணிகளில் அமைத்துப் பாடியுள்ளார். இந்தக் கண்ணிகளை இளமையில் மனப்பாடம் செய்யத் தவறியவர்கள்கூட நாற்பது ஐம்பது அகவையைத் தாண்டிய வர்களும்கூட இரண்டு மூன்று முறை படித்துப் போற்றினால் அவை அவர்கள் மனத்தில் நிலையான வாழ்வைப் பெற்றுவி டும். 'அன்பர்பணி செய்யளனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே. வல்லமையே காட்டுகின்ற மாமாயை நான்ஒருவன் இல்லையெனில எங்கே இருக்கும் பராபரமே. சினம்இறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம்இறக்கக் கல்லார்க்கு வாய்ஏன்? பராபரமே. கொல்லா விரதம்ஒன்று கொண்டவரே நல்லோர்:மற்(று) அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே. - எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” 26. பராபரம் - 155, 165, 169, 192, 221 - 5 பாடல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/61&oldid=892349" இலிருந்து மீள்விக்கப்பட்டது