பக்கம்:தாயுமானவர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் శ• 45 தத்துவங்களாலாகியது. தோன்றுகின்ற பொருள்கள் யாவும் அழிவன. ஆதலால் அறிவுடைப் பொருளாகவும் அழியாப் பொருளாகவும் உள்ள இறைவனை உயிர்கள் தம்முடைய மனம் வாக்கு காயங்களால் அறிய முடியாது. மனம் ஒன்றை உணருங்கால் இடத்தையும் காரணத்தையும் காலத்தையும் பற்றியல்லாது அதனை அறிவதில்லை. காலமும் இடமும் ஆகிய அளவும் பொருட்கட்கு அப்பாற்பட்டவராயும் தாம் எல்லாவற்றிற்கும் காரணராய் தமக்கு ஒரு காரணராயும் உள்ள கடவுளை அறிய முடியாது. எனினும் அடிகளாரின் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு கடவுளை சில தலைப்புகளில் ஆராய முற்படுவோம். (1) எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன்: இக்கருத்தினைக் குறிப்பிடும் பாடற் பகுதிகள். 'அங்கு:இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும் படிக்குஇச்சை வைத்துஉயிர்க்கு உயிராய் தழைத்தது.எது? மனம்வாக்கினால் தட்டாமல் நின்றது எது?” - பரசிவவணக்கம் - 1 'சித்தம்அறி யாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்வியதே சோமயத்தை' - மேலது 3 to o மனம்வாக்கு எட்டாச் عن ب.م موجب. சித்துஉருவாய் நின்றஒன்றை" - பொருள் வணக்கம் - 1 'யாதுமணம் நினையும் அந்த நினைவுக்கு நினைவுக்கு ஆகி: - மேலது - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/65&oldid=892353" இலிருந்து மீள்விக்கப்பட்டது