பக்கம்:தாயுமானவர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

争》 够 46 令 தாயுமானவர் 'அருமறையின் சிரப்பொருளாய் விண்ணவர்மா முனிவர்சித்தர் ஆதி ஆனோர் தெரிவரிய பூரணமாய் காரணம்கற் பனைகடந்த செல்வம் ஆகி" - மேலது - 8 'போதமாய், ஆதிநடு அந்தமும் இலதாய்ப், புனிதமாய், அவிகாரமாய் போக்குவரவு இல்லாத இன்பமாய்நின்றநின் ”ரனம الجبؤ - சின்மயானந்தகுரு - 10 'பார்த்தஇடம் எல்லாம் பரவெளியாய்த் தோன்றஒரு வார்த்தைசொல்ல வந்த மனுவே பராபரமே” - பராபரம் - 13 "எங்குஎங்கு பார்த்தாலும் இன்புறுவாய் நீக்கம்இன்றித் தங்கும் தனிப்பொருளைச் சாருநாள் எந்நாளே” - எந்நாட். பொருளியல்பு - 13 என்பன போன்ற பாடற்பகுதிகளில் இக்கருத்து பொதிந்திருப் பதைக் கண்டு மகிழலாம். (2) கடவுள் சொல்லிற்கு அடங்காதவர். சுட்டியறியும் அறிவு சுத்த தத்துவங்களின் தொடர்பால் உண்டாவது. அவ்வறிவிற்கு மூலமே சொல்லிற்கு மூலமாம். சுட்டியறியப் பெறாத கடவுளைச் சொல்லினால் உணர்த்த முடியாது. சமய நூல்கள் எல்லாம் மக்களுக்கு விளங்கும் அளவில் இறைவ னது தன்மையை ஒருவாறு இயம்புவனவாதலாலும் நூலறிவு சொல்லாற் பெறப்படுவதாலும், சொல் கடவுளையுணர்த்து வதற்குத் தக்க கருவி அன்றாகலானும் அடியிற் கண்ட வாக்குகள் எழுந்தன. - 'சமயகோ டிகள் எலாம் தம்தெய்வம் எம்தெய்வம் என்று எங்கும் தொடர்ந்துஎதிர் வழக்கிடவும் நின்றதெது?" Бтц4-5 - பரசிவ வணக்கம் - 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/66&oldid=892354" இலிருந்து மீள்விக்கப்பட்டது