பக்கம்:தாயுமானவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் & 47 & பகர்வனால் லாம்ஆகி அல்லது ஆகிப் பரம்ஆகிச் சொல்லரிய பான்மைஆகி' - பொருள் வணக்கம் - 12 "வாக்குமனம் அணுகாத பூரணப் பொருள்வந்து வாய்க்கும் படிக்கு உபாயம்” - சின்மயாநந்த - 2 'வாதம்,இடும் சமயநெறிக்கு அரியது ஆகி; மெளனத்தோர் பால்வெளியாய் வயங்காநின்ற சோதியை' - பொருள் வணக்கம் - 11 "சொல்லற்கரிய பரம்பொருளே, சுகவா ரிதியே சுடர்க்கொழுந்தே" - சொல்லற்கரிய - 1 'சொல்ஆய தொகுதி.எல்லாம் கடந்து நின்ற சொரூபானந் தச்சுடரே!” - கல்ஆலின் - 10 'உரைஇறந்த அன்பர்உளத்து ஓங்குஒளியாய் ஓங்கிக் கரைஇறந்த இன்பக் கடலே!” - பராயரம் - 6 "சொல்இறந்து நின்ற சுகருபப் பெம்மான்' - பைங்கிளிக்கண்ணி - 24 என்பவற்றால் இது தெளியப்பெறும். (3) இறைவன் புலன்களால் உணரப்படாதவன் அடியிற் கண்ட அடிகளின் பாடற்பகுதிகள் இதனை விளக்குவனவாக அமைகின்றன. 'சித்தம்அறி யாதபடி சித்தத்தில் நின்றுஇலகு திவ்வியதே சோமயத்தை" - - - பரசிவ வணக்கம் - 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/67&oldid=892355" இலிருந்து மீள்விக்கப்பட்டது