பக்கம்:தாயுமானவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் & 49 & "ஆதிஅந்தம் காட்டாத முதலாய். பால்வெளியாய் வயங்கா நின்ற சோதியை' - பொருள் வணக்கம் - 11 'இருளாகி ஒளியாகி நன்மைதி மையுமாகி இன்றாகி நாளையாகி என்றுமாய் ஒன்றுமாய், பலவுமாய், யாவுமாய், இவை அல்ல ஆயநின்னை' - ஆனந்தமானபரம் - 2 "நித்தமும் அநித்தமும், அஞ்சனநி ரஞ்சனமும், நிஷ்களமும் நிகழ்சகளமும், நீதியும் அநீதியும்; ஆதியொடு அநாதியும்; நிர்விஷய விஷயவரும் அத்தனையும் நீஅலது.என்.அத்தனையும் இல்லையெனின் - மேலது - 5 இறைவனது ஆனந்தம் மனம் காலம் முதலிய தத்துவங் கட்கு அப்பாற்பட்டதாய் - கடந்த நிலையில் - மாசற்றதாய் உள்ளது. இதனை அடிகள், 'மனமாதிக்கு எட்டாத பேரின்ப மயமாய்” - பொருள் வணக்கம் - 2 'மனது அவிழ நிறைவான துரிய வாழ்வை' - மேலது 5 'தெள்ளிமறை வடியிட்ட அமுதப் பிழம்பே - கருணாகரக் - 8 'துரவெளிய தாய்அகண்ட ஆனந்த சுகவாரி' - கருணாகரக் - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/69&oldid=892357" இலிருந்து மீள்விக்கப்பட்டது