பக்கம்:தாயுமானவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 50 o 怒 தாயுமானவர் என்று அனைத்தையும் உருவகங்கள் இட்டு விளக்குவார். ஒவ்வோர் உருவகத்தையும் சிந்தித்து அசை போட்டு அநுப விக்க வேண்டும். (5) கடவுள் ஒருவரே; பலரல்லர்: இறைவனின் தன்மை நமது அறிவிற்கு அப்பாற்பட்டது. எனினும் அவருடைய திருவருளினால் ஆட்கொள்ளப் பெற்ற அருட்செல்வர்களின் திருமொழிகளை ஆயுமிடத்து அவர் ஒப்பற்ற ஒரு பொருள் என்பது தெளியப்படும். கடவுள் பலராகவும் இருத்தல் முடி யாது. பல பொருள்களுள் ஒன்று சிறப்புடையதாக இருக் கும். உலகத்தை ஒழுங்காகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் நடைபெறச் செய்வதற்கும் ஒரு தலைவனே இருத்தல் வேண்டும். பலர் இருப்பின், அவருள் வேறுபாடு விளைந்து நடைபெறும் தொழில்களும் முரண்பட் டனவாய் அமைந்துவிடும். எவ்வகையான வேறுபாடும் இல் லையாதலால் பன்மைக் கருத்திற்கு இடம் இல்லை. எனவே, அறிவுடைய பரம்பொருள் ஒன்றே என்பது தெளியப்படும். இக்கருத்தை விளக்குவனபோல, "வேதசின் மாத்திரமாய் எம்ம னோர்க்கும் வெளியாக வந்தஒன்றே" w 4. - ஆகாரபுவனம் 'இமையளவும் உபகாரம் அல்லால் வேறுஒன்று இயங்காநிர்க் குணக்கடலாய் இருந்தஒன்றே” - மேலது - 5 'எண்தரும்நல் அகிலாண்ட கோடியைத்தன் அருள்வெளியில் இலக வைத்துக் கொண்டுநின்ற அற்புதத்தை, எவராலும் நிச்சயிக்கக் கூடா ஒன்றை:” - மண்டலத்தின் - 1 'கருணைமொழி சிறிதுஇல்லேன், ஈதல் இல்லேன் கண்ணிகம் பலைஎன்தன் கருத்துக்கு ஏற்க ஒருபொழுதும் பெற்றுஅறியேன், என்னை ஆளும் ஒருவா!' - பன்மாலை - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/70&oldid=892359" இலிருந்து மீள்விக்கப்பட்டது