பக்கம்:தாயுமானவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 多 தாயுமானவர் 哆 效 இங்ாவனம் தேசோமயானந்தம் என்ற பதிகத்தில் ஒவ் வொரு பாடலும் முடிவது. 'அனந்தபத உயிர்கள்தொறும் உயிராய் என்றும் ஆனந்த நிலையாகி’ - ஆகாரபுவனம் - 2 'உள்ளமே நீங்கா என்னவா வாளன்று உலப்பிலா ஆனந்தம் ஆன வெள்ளமே” - ஆரணம் 4 'பாவியேன் இனிஎன் செய்கேன் பரமனே! பணிந்துஉன் பாதம் சேவியேன், விழிநீர் மல்கச் 'சிவசிவ என்று தேம்பி ஆவியே, நிறைய வந்த அமுதமே” - சிவன்செயல் - 2 'அண்டமுமாய்ப் பிண்டமுமாய் அளவி லாத ஆருயிருக்கு ஓர்உயிராய் அமர்ந்தாய் ஆனால் கண்டவர்.ஆர்? கேட்டவர்.ஆர்?" - ஆசையெனும் - 12 என்பவை காண்க. (7) படைத்தல், காத்தல், அழித்தல் முதலியன செய்தல்: இறைவன் படைத்தல் முதலிய ஐந்தொழில்களையும் தன் பொருட்டு செய்பவனல்லன். தன் பொருட்டு செய்பவனா யின் அவன் உலகப் பற்றுடையவனாவன். அஃது அவனது முழுமுதல் தன்மைக்குப் பேரிழுக்கு ஆதலின் அவன் ஐந்தொ ழில்களையும் இயற்றுவது உயிர்களின்பொருட்டேயாகும், இதனை, 'திருவருள் ஞானச் சிறந்தருள் கொழிக்கும் குருவடி வான குறைவிலா நிறைவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/72&oldid=892361" இலிருந்து மீள்விக்கப்பட்டது