பக்கம்:தாயுமானவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 54 多 தாயுமானவர் 'பொருள் அனைத்தும் தரும்பொருளே காலமும் தேசமும் வகுத்துக் கருவிஆதி விரிவினையும் கூடி உயிரத்திரளை ஆட்டும் விழுப்பொருளே’ - ஆகாரபுவனம் - 7 என்ற திருவாக்குகள் இறைவன் முத்தொழில் இயற்றுவதை விளக்குவனவாம். இறைவனே மாதொரு பாகனாய் போகத்தையும், கல்லா லின் நிழற்கண் குருவாய் அமர்ந்து வீட்டிற் கேதுவாய் யோகத்தையும் நல்குவான் என்று கூறும் அடிகள், 'இல்லாளியாய் உலகோடு உயிரை ஈன்றிட்டு எண்ணரிய யோகினுக்கும் இவனே என்னக் கல்லாலின் கீழிருந்த செக்கர்மேனிக் கற்பகமே: - ஆசையெனும் 24 'உலக மாயையி லேஎளி யேன்தனை உழல விட்டனை யே,உடை யாய்அருள் இலகு பேரின்ப வீட்டினில் என்னையும் இருத்தி வைப்பது.எக் காலம்?" - மேலது 7 'அன்றாலின் கீழிருந்து மோன ஞான அமைத்தசின் முத்திரைக் கடலே அடியரேறே” இவற்றால் மறைத்தலும் அருளலும் இறைவனது தொழில் என்பதைக் குறித்தவாறாயிற்று. "புகல்அரிய நின்விளையாட்டு என்னே? எந்தாய்! புன்மை,அறிவு உடையஎன்னைப் பொருளப் பண்ணி இகல்விளைக்கும் மலமாயை கன்மத் துடே இடர்உறவும் செய்தனையே இரக்கம் ஈதோ' - கல்லாலின் 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/74&oldid=892363" இலிருந்து மீள்விக்கப்பட்டது