பக்கம்:தாயுமானவர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் என்னும் பெயரை அகலிற்கு இட்டு வழங்குவது போலச் சீவனைச் சிவன் என்பர் சிலர். இக்கருத்திற்குரிய பாடல், 'விளங்குந் தகளியையும் வேறென்னார் நின்னைத் துளக்கமறச் சிவனென்று சொல்வார் பராபரமே” - பராபரக்கண்ணி 103 இருளிற் கைவிளக்கின் பின்னை போய்ப் பொருளையறி வதுபோல, ஆணவ இருளிற்கிடக்கும் உயிர்கள் தமது தவத் தால் விளங்கும் இறையருளறின் பின் சென்று மெய்யுணர வேண்டும் என்று கருதும் அடிகள், "கைவிளக்கின் பின்னேபோய்க் காண்டார்போல் மெய்ஞ்ஞான மெய்விளக்கின் பின்னேபோய் மெய்காண்பது - எந்நாளோ?” - எந்நாட்கண்ணி பொருளியல்பு - 1 என்று கூறுவார். உயிர், தனது சுட்டறிவினை இறைவனது அகண்டாகாரமான பேரறிவோடு இரண்டறக் கலந்ததாகக் கருதும் அத்துவித பாவனையால் முத்திக்கு உரியதாகும். இதனை, 'கண்டஅறிவு அகண்டா காரமென மெய்யறிவிற் கொண்டவர்க்கே முக்தி கொடுப்பாய் பராபரமே” - பராயரக் கண்ணி - 374 என்று கூறுவர். இறைவனது பேரறிவில் உயிர் கலந்து நிற்பதையே விரும்புவர். இதனை, 'எண்ணறிவுக் குள்ளே யிருந்ததுபோல் ஐயாவே நின்னறிவுள் நின்னுடன்யான் நிற்கவைத்தால் ஆகாதோ?” - ஆகாதோ என் கண்ணி - 10 என்று தெரிவிப்பர். - இறைவன் யாதொன்றினும் பற்றிலனாய்த் தனக்கென ஒன்றை வேண்டாதவனாயினும் தான் உயிர் மாட்டு வைத்த பேரருளினாலே, எப்பொருளினும் கலந்து எவற்றிற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/77&oldid=892366" இலிருந்து மீள்விக்கப்பட்டது