பக்கம்:தாயுமானவர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ 62 ; தாயுமானவர் என்று அடிகள் அருளியவாறு சிவன், சதாசிவன், மகேசுரன், அனந்தர், சீகண்டர், நான்முகன், திருமால் என ஏழு மூர்த்திக ளையும் இறைவன் ஒருவனே எல்லாவற்றையும் இயற்றுத லால் உயிர்களாகிய அயன், அரி, அரன், அனந்தர் என்பவர் கட்குத் தம் தொழில் யாதும் இல்லை என்பது அறியப்படும். இறைவன் தானே சுத்தபுவனங்களிலே சிவன், சதாசிவன், மகேசுரனாய் மூவுருவம் கொள்ளுதலின், "குன்றாத மூவுருவாய் அருவாய், ஞானக் கொழுந்தாகி” - பன்மாலை 8 என்றனர். 'மூன்றுகண்ணா முத்தொழிலா மும்முதலா, மூவுலகும் தோன்றக் கருணைபொழி தோன்றலே' - உடன்பொய்யு - 31 என்றமையால் இறைவனே பிரகிருதித் தலைவனாய், அயன், அரி, அரன் என்னும் மூவரையும் அதிட்டித்து நடத்துகின் றான் என்பது அறியப்படும். மும்மூர்த்திகளின் நிலையே இவ்வாறு என்றால் ஏனைய அமரர்களின் நிலையும் அத்தகை யதே என்பது சொல்லாமல் போதரும். திருவருளே யாண்டும் நின்று அனைத்தையும் நடத்து கின்றது என்பதனை, 'பின்னும் முன்னுமாய், நடுவுமாய் யாவினும் பெரியது என்னும் தன்மையாய், எவ்வுயிர்த் திரளையும் இயக்கி மன்னுமு தன்னருள் வடிவமே!' - எனக்கெனச் செயல் - 15 'அருள்ள லாம்திரண்டு ஒர்வடிவு ஆகிய பொருள்ள லாம்வல்ல பொற்பொது நாத!” - பொன்னைமாதரை - 68 தாயு-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/82&oldid=892372" இலிருந்து மீள்விக்கப்பட்டது