பக்கம்:தாயுமானவர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 象 தாயுமானவர்

3. இறைவன் அறிவுக்கறிவாகி இருந்து உயிரின் நினைப்ப னைத்தையும் தெரிவிக்கின்றார். இதனை அடிகள், 'உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து என்கள்ள மெல்லாம் வள்ளல்அறிந்தா லெனக்கு வாயும் உண்டோ பைங்கிளியே' - பைங்கிளி 35 என்று இயம்புவார். இறைவன் திருவருள் சுத்த மாயையின் வடிவான சொல் லிற்கு அப்பாற்பட்டது. ஆகலின் அது சொல்லால் உணர்த் தப் பெறாத வெளி என்பதை மோன வெளி என்கின்றார். இறைவனை அவனது திருவருள் வாயிலாகவேதான் உயிர் கள் காண முடியும். பூதங்கள் முதலான தத்துவங்களால் அவனை அறிய முடியாது. இறைவனைத் தோற்றுவிக்கும் திருவருளை வடிவம் என்றும், உயிருக்குக் கண் என்றும் கூறுவது மரபு. 'காட்டும் திருவருளே கண்ணாகக் கண்டுபர வீட்டின்ப மெய்ப்பொருளை மேவுநாள் எந்நாளோ?” - எந்நாட்கண்ணி - பொருளியல்பு - 6 'மண்ணோடுவிண் காட்டி மறைந்துமறை யாவருளைக் கண்ணோடுகண் னாகஎன்று காண்பேன் பராபரமே (82) எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் 355) என்றவாறு எப்பொருளை நோக்கினாலும் அவற்றிற்கு உள் வளிடாய் அவற்றிற்கு அடிப்படையாய் திருவருள் வெளியை இறைவன் திருவடிவாக நினைத்து வழிபட வேண்டும். இதனை, 'கண்டன எலாம்மோன உருவெளியது ஆகவும் சுருதிஅஞ் சலிசெய்குவோம்' - பரமசிவ வணக்கம் - 1 என்று கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/84&oldid=892374" இலிருந்து மீள்விக்கப்பட்டது