பக்கம்:தாயுமானவர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 66 ° தாயுமானவர் 'சிந்தித்த எல்லாம்என் சிந்தைஅறிந் தேஉதவ வந்தகருனை மழையே பராபரமே” - பராபரம் - 3 இன்னும், 'பெருகிய கருணை வாரிதியே' - சிவன்செயல் - 8 என்பதால் அருள் கடலாகிறது. மேலும், 'தீதில் அருட்கலைச் சேருநாள் எந்நாளே” - எந்நாள் - அருள்.இயல்பு - 3 என்பதிலும் அருள் கடலாகிறதைக் கண்டு மகிழலாம். 'வான்கருணை வெள்ளமாகி" - ஆனந்தமானபரம் - 7 of £ அடியார் நினைவினிடை ஆறாய்ப் பெருகும் பெருங்கருணை அரசே' - சொல்லற்கரிய - 7 என்பவற்றில் திருவருள் வெள்ளமாகவும் (ஆறு). ஆறாகவும் உவமிக்கப் பெற்றிருப்பதைக் காணலாம். 'கன்றுமன வெப்பக் கலக்கமெலாம் தீரஅருள் தென்றல்வந்து வீசுஒளி சேருநாள் எந்நாளே?” - எந்நாட் - அருள்.இயல்பு 8 இங்கு அருள் தென்றல் (காற்றும்) ஆயினமையைக் காண்கின் றோம். ஒளி: திருவருளை ஒளியாகவும் உருவகித்துக் கூறுகின் றார். 'ஆதி அந்தம்நடு வேதும் இன்றி.அரு ளாய்நிறைந்து இலகு சோதியே’ - சிற்சுகோதயவிலாசம் - 3 'முக்கண் அருள்செம்பொன் சோதியே' - பொன்னைமாதரை - 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/86&oldid=892376" இலிருந்து மீள்விக்கப்பட்டது