பக்கம்:தாயுமானவர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் & 67 & சோதியே சுடரே சுகமே” - மேலது - 22 'சொரூபா னந்தச் சுடர்க் கொழுந்தே" - சொல்லற்கரிய - 4 "பரஞான ஆனந்த ஒளியே' - மலைவளர்காதலி - 1 என்ற இடங்களில் அருள் ஒளி என்று குறிக்கப் பெற்றிருப்ப தைக் காணலாம். அருளைக் கதிரவனாகவும் உருவகித்துப் பேசுவார் அடி கள். 'தக்கரவி கண்ட சரோருகம்போல் என்இதயம் மிக்கஅருள் கண்டு விகசிப்பது எந்நாளே” (சரோருகம் - தாமரை) - எந்நாள் - அன்புநிலை - 1 என்பதில் சூரியனைக் கண்ட தாமரை மலர்வதுபோல இறை வனருள் கண்டு தன் இதயத்தாமரை மலர்வதைப் பற்றிப் பேசுவதை இதில் காணலாம். (12) இறைவனது திருஉருவம்: அருளே இறைவனுக்குத் திருமேனி. அருளினைச் சார்தல் இறைவனது அகத்துள் உதித்தலாகும். இதனை, 'இவ்வுடம்பு நீங்குமுனே எந்தாய்கேள் இன்னருளாம் அவ்வுடம்புக்கு உள்ளே அவதரிக்கக் காண்பேனோ” - காண்பேனோ - 27 என்று குறிப்பிடுவர். உலக வாழ்வாகிய வெம்மையை நோக் கிக் கொண்டிருந்த துன்பம் நீங்கும்படியாகத் திருவருளின் கண்ணே உறங்க விழையும் பெருமான், "வெய்யபுவி பார்த்து விழிந்து இருந்த அல்லல்அறத் துய்ய அருளில் துயிலுநாள் எந்நாளோ' - எந்நாள் - அருளியல்பு - 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/87&oldid=892377" இலிருந்து மீள்விக்கப்பட்டது