பக்கம்:தாயுமானவர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் & 69 & என்ற அடிகளின் வாக்கு இக்கருத்துக்கு அரணாக அமைகின் நிது!. கண்டனவெல்லாம் இறைவன் திருவடிவமே என்று வழி படுவதே அகண்டாகாரபூசை. "ஆசனமூர்த் தங்கள் அறஅகண்டா காரசிவ பூசைசெய ஆசை பொருந்துநாள் எந்நாளே” - எந்நாள் - நிலை பிரிந்தோர் - 12 என்பதனால் இதனை அறியலாம். அடிகள் பெருமான் அத்த கைய வழிபாட்டினராக இருந்தனர். 'கண்டவடிவு எல்லாம்நின் காட்சிஎன்றே கைகுவித்துப் பண்டும்இன்றும் நின்றளன்னைப் பார்த்துஇரங்க வேண்டாவோ - வேண்டாவோ என்கண்ணி - 1 என்ற கணணியால் இதனை அறிய முடிகின்றது. நிலம் முதல் நாதம் முடிவாகவுள்ள எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட திருவருள் ஒளியே இறைவன் திருவுரு என் பது அடிகளாரின் கொள்கை. 'இருநிலம் ஆதி நாதம் ஈறது.ஆம் இவைக டந்த பெருநிலம் ஆய தூய பேரொளிப் பிழம்பாய் நின்றும்; கருதரும் அகண்டா னந்தக் கடவுள்' - வம்பனேன் - 3 என்பதில் இதனைக் காணலாம். இங்கே பெருநிலம் என்றது திருவருளை. பேரொளி என்றது இறைஞானத்தை. போதபரி பூரண அகண்டிதாகாரமாகிய பரம்பொருள் உயிர்கட்கு விளங்குந் திருமேனியுடன் தோன்றி அருள் செய்யாதவி டத்து, உயிர்கள் அதனை அறியமாட்டா. அதற்காக இறை வன்தடத்த நிலையில் உருவத் திருமேனிகளை மேற்கொள்ளு கின்றான். இவற்றை அடிகள் பல பாடல்களில் போற்றியுள் grtfrmT.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/89&oldid=892379" இலிருந்து மீள்விக்கப்பட்டது