பக்கம்:தாயுமானவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் 多 71 领 முறை இரண்டு பாடல்களில் (6,7) தொகுத்துரைக்கப் பெற் றுள்ளது. ஆறாம் பாடலில் 'உயிரின் அறிவையும் மறைத்துத் தன்னையும் மறைக்கும் ஆணவம் என்னும் மலத்தால் பிணிக் கப்பெற்ற தனிநிலை என்னும் இருள் நிறைந்த சிறுவிட்டில் அறிவில்லாத குருட்டுக் குழவிபோலக் கட்டுப்பட்டிருந்த உயிர்களாகிய நம்மை வெளியில் வரச்செய்து, துன்பத்திற்கி டமாகிய உட்கருவிகளாலும் புறக் கருவிகளாலும் ஆகிய உடம்பினைப் பாதுகாப்பாக அமைத்து, தொடர்பற்ற தத்து வங்கட்கேற்ற பெயரை அமைத்து மெய் என்று பேசுகின்ற பொய்யுடல் நிலைத்து வளரும் வண்ணம் நுகர்பொருள்கள் பலவும் அமைத்து, பெரிய உலகத்திலே மேலும் கீழும் அங்கும் இங்கும் போக்குவரவு செய்தலாகிய பிறப்பு - இறப்பு என்னும் பெரிய விளையாட்டையும் அமைத்து, அழகியதாய்த் தான்வகுத்த கட்டளைப்படி நில்லாது நெறிதப் பினோர்களை எமன் வாயிலாகத் துன்புறுத்துவித்து, நெறி நின்ற காலை எவ்வகைத் துன்பங்களையும் ஒழித்து மெய்யு ணர்வு நல்கிக் காலம் கடந்த பேரின்ப வீட்டினை நன்கு பொருந்தித் தூங்குக என்ற சிறப்பு நிலைதந்த உலகன்னை வடிவாகிய எந்தையே' என்று உருக்கமாக விளக்குகின்றார். இதனால் உயிர்கள் ஆணவத்தோடு மட்டும் பிணிக்கப் பெற்றிருந்த தனிநிலையும் (கேவலநிலை) மாயையாலாகிய தத்துவங்களோடு கலப்புற்றுச் செயும் இருவினைக்கேதுவாக உடம்பெடுத்து உழலும் கலப்பு நிலையும் பிறப்பு இறப்பு அற்றுச் சிவப்பேறு எய்தியபின் உள்ள தூய நிலையும் விளக் கப் பெற்றன. 'கேவல சகலம் இன்றிக் கிழொடு மேலாய், எங்கும் மேவிய அருளின் கண்ணாய் மேவிட’’ - ஆசையெனும் - 15 என்று பிறிதோர் இடத்தில் கூறுவதும் இதனையேயாகும். ஏழாம் பாடலில் 'கருக்கட்டி வைத்து உலோகங்களைப் புடம் போடுவதற்கு அமைத்த 'மூசை என்னும் சிறுகலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/91&oldid=892382" இலிருந்து மீள்விக்கப்பட்டது