பக்கம்:தாயுமானவர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 74 & தாயுமானவர் என்ற பாடல் மன்றில் ஆடும் பெருமானையே குறிப்பதாகும் என்பது ஒர்ந்து உணரத்தக்கது. தில்லைமன்றினுள் எச்சமயத்தினரும் தம் சமயக் கருத்து ஆங்கு உண்டென்று கருதி வணங்குதற்குரிய அருள்நிலை உளதென்று உரைப்பர் அடிகள்.

  • {

பகர்வுஅரிய தில்லைமன்றுள் பார்த்த போதுஅங்கு என்மார்க்கம் இருக்குதுஎல்லாம் வெளியே என்ன எச்சமயத் தவர்களும்வந்து இறைஞ்சா நிற்பர்’ - ஆகாரபுவனம் - 12 என்பதில் இதனைக் காணலாம். தில்லைமன்றிற்குப் பொது' என்ற பெயர் இருப்பது இக்கருத்தினை வற்புறுத்துவதற்காகவே என்றும் கருதலாம். தில்லையில் இறைவனுக்கு அருள்வழிபாடு நிகழ்வதால் அதனை மட்டிலும் விரும்புகின்ற சமயத்தாருக்கும் அங்கே இடம் உண்டு. அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அருவுருவ மாய்ப் பூசனை ஏற்கின்றாராதலின் அருவுருவ வழிபாடுடை யாருக்கும் அங்கே பொருத்தமான வணக்கத்திற்கு இடம் உண்டு. உருவ வழிபாட்டிற்கும் கூத்தப் பெருமான் சிறந்ததா கும். உயிருக்குயிராய் ஐந்தொழில் புரியும் இயல்பினையே கூத்தப் பெருமானின் வடிவம் குறிக்கின்றது. இறைவனைப் படைப்போனாக வழிபடுவோருக்கும் நாத வடிவமாக வழிப டுவோருக்கும் அங்கே இடம் உண்டு என்பது கூத்தப்பெரு மான் திருக்கரம் ஒன்றில் உடுக்கை வைத்த்ருப்பதால் தெளி யப்படும். கூத்தப்பெருமான் உயிர்களை நோக்கி அஞ்சேல் என்று அபயம் காட்டும் திருக்கரம் உடைமையால் அவர் காத்தற் கடவுள் என்பது நன்கு விளங்கும். இறைவன் ஒரு திருக்கரத் தில் நெருப்பு வைத்திருப்பதால் எல்லாவற்றையும் ஒடுக்குப வன் அவனே என்பது ஒர்ந்து உணரப்படும். இருவினைப் பயனை நுகரும்படி ஆருயிர்களைப் போகத்தில் பிணிப்ப தாய மறைத்தல் தொழிலை அவனது ஊன்றிய திருவடி உணர்த்துகின்றது. அவனது தூக்கிய திருவடி பிறப்பிறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/94&oldid=892385" இலிருந்து மீள்விக்கப்பட்டது