பக்கம்:தாயுமானவர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 75 哆 3, இறைவனின் திருக்குணங்கள் பற்று முடிவாகப் பெறுதற்குரிய வீட்டின்பத்தைக் குறிப்பதா கும். இறைவனே உயிர்கட்கு நல்வினைக்கு நன்மையும் தீவினைக்குத் தீமையும் விதிப்பவர் என்ற கருத்துடையார்க் கும், அவருடைய திருவடியடைதலே முக்தி என்று கருது வார்க்கும் கூத்தப்பெருமானின் திருவுருவே வழிபடற்குரிய தாகும். இறைவனை ஞானமயமாகக் கருதுவார் சிதம்பரம் என்ற சொல்லின் பொருளை நாடி தில்லை மன்றே தாம் வழிபடும் இடம் என்று கொள்வர். அறிவின் நிறைவாய் எப்பொருளும் தன்னுள் அடங்கப்பெறும் அருள் வெளி என்று அது பொருள்படும். சித்-அறிவு; அம்பரம் - ஆகாசம் அல்லது வெளி. இனி இறைவனை எல்லாவற்றையும் ஆட்டுவிக் கின்ற முதல்வனாகக் கருது வார்க்குக் கூத்த வடிவமே அவ்வ ருட் செயலை நினைவுறுத்தும். எல்லார்க்கும் பொதுவாக நடுநிலையில் உள்ள இறைவன் பொதுவில் நடனமாடுகின் றான். ஆதலால் நீதித் தலைவனாக இறைவனைக் கருதுவார்க் கும் தில்லை மன்று பொருத்தமானதே. போகத்தையும் வீடு பேற்றையும் இறைவன் அருளுதலால் இறைவனைப் பெருங் கருணையாளனாகக் கருதுவார்க்கும் சிற்றம்பலம் சிறந்ததோர் இ.மே. இக்கருத்து பற்றியே, 'பொய்வந்து உழலும் சமயநெறி புகுத வேண்டா முத்திதரும் தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாரும் செகத்திரே - காடும் கரையும் - 2 என்று மொழிந்தருளினார். (இ) தையல்பாக வடிவம்: இதுவும் அடிகளாரின் பாடல்க வரில் போற்றப்படுகின்றது. “மாது காதலி பங்கனை' - ஆசையெனும் - 11 'இல்லாளி யாய், உலகோடு உயிரை ஈன்று' - மேலது 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/95&oldid=892386" இலிருந்து மீள்விக்கப்பட்டது