பக்கம்:தாயுமானவர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 数,76 多 தாயுமானவர் 'பச்சைநிற மாய்ச்சிவந்து பாகம் கலந்துலகை இச்சையுடன் ஈன்றாளை” - எந்நாள் தெய்வவ ை- 7 என்பவற்றில் இவ்வடிவம் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். (ஈ) குருலிங்க சங்கம வடிவங்கள்: இறைவனது பிற வடிவங்கள் மிகுதியாக விதந்தோதப் பெறவில்லை. எனினும், 'குருலிங்க சங்கமாகக் கொண்ட திருமேனி! - உடல்பொய்யுறவு - 23 'குருலிங்க சங்கமமாக் கொண்ட திருமேனி அருள்மயம்என்று அன்புற்று அருள் பெறுவது எந்நாளே” - எந்நாள் - நிலைபிரிந்தோர் - 16 என்ற இடங்களில் குருலிங்க சங்கமங்கள் இறைவன் திருமே னிகளாக வருவது காண்க. (உ) விழையும் வடிவுகள்: அன்பர்கள் விழையும் வடிவங் களை மேற்கொள்வான். இதனை, 'ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்தருள்வாய் எந்தைநீ” - எங்கும் நிறைகின்ற - 3 என்பதில் காணலாம்." இங்ங்னம் இறைவனது பேரருள் திறத்தைக் கண்டு மகிழலாம். (13) வீடுபேறு எய்தும் உயிர்கட்கு இறைவன் பேரின்பம் அளித்தல்: உயிர்கள் ஐம்புல நுகர்ச்சியினால் எய்தும் இன்பத் தையே பெரிதும் நாடி நிற்கும். அந்த இன்பம் நிலையற்றதாத லாலும் சடமாகிய மாயையின் தொடர்பால் வருவதாகலா னும், அதனைச் சிற்றின்பம் என்பர் பெரியோர். அறிவுடைப் 2. இத்தகைய கருத்து பொய்கையாழ்வார் பாசுரங்களில் காணலாம். 'தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவத் தானே - முதல். திருவந். 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/96&oldid=892387" இலிருந்து மீள்விக்கப்பட்டது