பக்கம்:தாயுமானவர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ 78 தாயுமானவர் அகம்புறம் என்று உன்னாத பூரண ஆனந்தம்' - பொருள் வணக்கம் - 7 'சதானந்தம் ஆன பெருந்தகை (மேலது 10) 'மன்னு பரிபூரணச் சுகவாரி: - (சின்மாயனந்தகுரு - 8) போக்குவரவு இல்லாத இன்ப மாய்நின்றபூரணம் (மேலது - 10) முடிவுஇலா இன்பமே செய் யும்.தானமே (சிவன்செயல் - 6) "பூரணா னந்தவாழ்வு' (கற்புறு சிந்தை - 1) (ஆ) இறைவனது பேரானந்தம் அறிவுமயமாய் அறிவின் கண் னையே நிலைத்து நிற்பது: "ஞான ஆனந்தமாம் பெரிய பொருள் - பரசிவ வணக்கம் - 2 "ஞானக் கண்ணாரக் கண்டன்பர் கண்ஊடே ஆனந்தக் கடலாய் - (பொருள் வணக்கம் - 9) "என் அறிவில் ஊறும் ஆனந்த வெள்ளமே - (சுகவாரி - 7)'அறிவு ஆனந்தத் தேன்ஆகி' - பன்மாலை - 5 'மதியுள் நின்றுஇன்ப வாரி வழங்குமே” - பொன்னை மாதரை - 29 'உரைஉணர்வு இறந்து தம்மை உணர்பவர் உணர்வின் ஊடே கரைஇலா இன்ப வெள்ளம் காட்டிடும் முகில்ே - ஆசையெனும் 14 என்ற பாடற் பகுதிகளில் இறைவனது பேரானந்த திலையைக் கண்டு மகிழலாம். தாயு-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/98&oldid=892389" இலிருந்து மீள்விக்கப்பட்டது