பக்கம்:தாய்லாந்து.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

பக்கத்தில் படித்துறை. அங்கங்கே படிகளில் துணி துவைக்கும் பெண்களைப் பார்க்கும்போது கேரள ஜாடை வீசுகிறது!

படகுகளில் வேகமாக நம்மைத் துரத்தி வரும் தாய்லாந்து சிறுவர்களும், சிறுமிகளும் வாழைப்பழம், இளநீர் மல்லி போன்றவைகளை வாங்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

எங்கள் படகோட்டி ஓரிடத்தில் படகை நிறுத்தி “இறங்குங்கள்; இங்கே தான் வாட் அரண் இருக்கிறது” என்றார். எண்ணிலாப் படிகள் பிரமிப்பைத் தந்தன. எனவே, படகில் இருந்தபடியே அந்தக் கோயிலைப் பார்த்து விட்டுத் திரும்பினோம்.

‘வாட் அருண்’ என்றால் சூரியனுக்குக் கோயில், ‘காலை நேரச் சூரியன்’ என்று கூறினார் படகுக்காரர்.

“காலை நேரச் சூரியனா? எனக்கு ரொம்பப் பிடித்த சூரியனாச்சே!” என்று மகிழ்ந்து போனேன்.

அயோத்தியில் ராமர் இல்லாதது போல் இங்கே சூரியன் கோயிலில் சூரியன் இல்லை. இங்கேயும் புத்தர்தான்!

13
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/12&oldid=1075183" இருந்து மீள்விக்கப்பட்டது